உச்ச அதி​காரப் புள்ளியின் ‘பேரவை’ நிலை வருத்தம் | உள்குத்து உளவாளி

உச்ச அதி​காரப் புள்ளியின் ‘பேரவை’ நிலை வருத்தம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

ஆட்சி மட்​டத்​தின் உச்ச அதி​காரப் புள்​ளி​யானவர், அண்​மை​யில் அருவி மாவட்​டத்​துப் பக்​கம் நட்பு ரீதி​யில் ஒரு நிகழ்ச்​சிக்​காக சென்​றிருந்​தா​ராம். மிஷனரி​கள் சம்​பந்​தப்​பட்ட கல்விக்​கூட திறப்பு விழா​வாம் அது. அங்கே ரிப்​பன் வெட்​டிய பிறகு தனது நெருக்​க​மான நண்​பர்​கள் சிலருடன் பேசிக் கொண்​டிருந்​தா​ராம் அதி​காரப் புள்​ளி. அப்​போது, பேரவை நடப்​பு​கள் குறித்து பேச்​சுத் திரும்​பிய​தாம். அது குறித்து நிஜ​மான வருத்​தத்​துடன் பேசிய அதி​காரப் புள்ளி, “நானும் எவ்​வளவோ சொல்​லிப் பாக்​குறேன். கேக்க மாட்டேங்​குறாங்க.

நம்ம தரப்​புல சில பேரு மறு​படி மறு​படி வெறுப்​பேத்​துற மாதிரியே பேசுறாங்க. மாண்​புமிகு ஒரு​வரின் பெயரைக் குறிப்​பிட்டு இவங்க தான் அப்​படி இருக்​காங்​கன்னா அனுபவம் வாய்ந்த சூரியக் கட்​சிக்​காரங்க அதுக்கு மேல இருக்​காங்க. பேரவை ஆரோக்​கிய​மான விவாதங்​களோட நடந்தா மக்​களுக்கு இன்​னும் எவ்​வளவோ நல்லது செய்​ய​லாம். இது யாருக்​கும் புரிய​மாட்​டேங்​குது.இதையெல்​லாம் பார்க்​கை​யில உண்​மை​யிலயே மனசுக்கு ரொம்​பக் கஷ்டமா இருக்​குங்க” என்று வேதனைப்​பட்​டா​ராம்​.

உச்ச அதி​காரப் புள்ளியின் ‘பேரவை’ நிலை வருத்தம் | உள்குத்து உளவாளி
காக்கி அதி​காரி​களை ‘கணக்கெடுக்கும்’ ஆளும் கட்சி | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in