காக்கி அதி​காரி​களை ‘கணக்கெடுக்கும்’ ஆளும் கட்சி | உள்குத்து உளவாளி

காக்கி அதி​காரி​களை ‘கணக்கெடுக்கும்’ ஆளும் கட்சி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

மலைக்​கோட்டை மாநகரில் இருக்​கும் காக்கி அதி​காரி​கள் சிலர் இன்​ன​மும் பழைய பாசத்​தில் சூரியக் கட்சி விஐபிக்​களுக்கு விசுவாச​மாக இருப்​ப​தாக பரவலாகப் பேச்சு இருக்​கிறது. அண்மையில் மீசைக்​கார முன்​னாள் மாண்​புமிகு சம்​பந்​தப்​பட்ட இடங்​களில் ‘பிரிய​மான சோதனை’ நடத்த ஆளும் தரப்பு திட்​ட​மிட்​ட​போது, கரப்​ஷன் ஒழிப்​புத்துறை​யில் இருக்​கும் அதி​காரி ஒரு​வர் அதை முன்​கூட்​டியே மீசைக்​காரர் வட்​டத்​துக்கு லீக் செய்​த​தாக முன்பே சொல்லி இருந்​தோம். இந்​நிலை​யில், ஆளும் கட்​சி​யின் சந்​தேக வளை​யத்​துக்​குள் சிக்​கியசாஸ்தா கடவுளின் பெயர் கொண்ட அந்த அதிகாரியை ‘குறிச்​சி’ மாவட்​டத்​துக்கு தூக்கி அடித்​துள்​ளனர்.

இதே​போல, மலைக்​கோட்டை நகரில் உளவு சொல்​லும் பிரி​வில் இருந்த பழைய மூன்​றெழுத்து சினிமா இயக்​குநர் பெயர் கொண்​ட​வரை தென் கோடி கடல் மாவட்​டத்​துக்கு தூக்கி அடித்​துள்​ளனர். இதே​போல, சூரியக் கட்சி மாண்​புமிகுக்​களால் ‘தொலை நோக்​குச்’ சிந்​தனை​யுடன் ஆங்​காங்கே முன்​கூட்​டியே செட் பண்ணி உட்​கார வைக்​கப்​பட்ட இன்​னும் சில காக்கி அதி​காரி​களை கணக்​கெடுக்​கும் பணி நடக்​கிற​தாம்.

அந்த லிஸ்ட் ரெடி​யானதும் அவர்​களை​யும் தெற்கு வடக்​காக தூக்கி அடிக்​கப் போகிறார்​களாம். இது தெரிந்​து, சந்​தேக வளை​யத்​துக்​குள் இருக்​கும் காக்கி அதி​காரி​கள் சிலர் ஆளும் கட்​சிக்கு அவுட்​டரில் இருந்து ஆலோ​சனை வழங்​கும் அரண்​மனைப் பூசா​ரி​களைத் தேடி நீலாங்​கரைப் பக்​கம் படையெடுக்​கத் தொடங்​கி இருக்​கிறார்​களாம்​.

காக்கி அதி​காரி​களை ‘கணக்கெடுக்கும்’ ஆளும் கட்சி | உள்குத்து உளவாளி
சூரியக் கட்சி ஜூனியர் - சீனியர் பஞ்சாயத்து நிலவரம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in