மூன்​றாக பிரிக்​கப்​பட்​ட கோழிப்​பண்ணை மாவட்ட சூரியக் கட்சி | உள்குத்து உளவாளி

மூன்​றாக பிரிக்​கப்​பட்​ட கோழிப்​பண்ணை மாவட்ட சூரியக் கட்சி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

கோழிப்​பண்ணை மாவட்ட சூரியக் கட்சி தற்​போது மூன்​றாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், தலைநகரை உள்​ளடக்​கிய மத்​திய மாவட்​டத்​துக்கு எப்​படி​யா​வது செய​லா​ள​ராகி​விட வேண்​டும் என சிட்​டிங் மாவட்​டச் செய​லா​ள​ரும் சின்​னவ​ரால் முன்​னுக்கு கொண்​டு​வரப்​பட்​ட​வரு​மான ‘ராஜகு​மாரர்’ பிளான் போடு​கிறா​ராம்.

ஆனால், சட்​டமன்​றத் தேர்​தலில் இவரது பிர்கா​வுக்​குள் இருந்த மூன்று தொகு​தி​களி​லும் சூரியன் மூன்​றாமிடத்தைப் பிடித்​தது​தான் இவர் செய்த ‘சாதனை’ என்று சொல்லி தலை​மைக்கு புகார்​களைத் தட்​டி​விட்​டிருக்​கும் மாவட்ட நிர்​வாகி​கள் சிலர், “எக்​காரணம் கொண்​டும் இவரை மீண்​டும் மாவட்​டப் பொறுப்​பில் அமர்த்தி விடாதீர்​கள். புதி​ய​வர்​கள் யாருக்கு வேண்​டுமா​னாலும் அந்​தப் பதவியைக் கொடுங்​கள்” என்று பதறி இருக்​கிறார்​களாம்.

இருந்​தா​லும் பெருத்த நம்​பிக்​கை​யுடன் இருக்​கும் ‘ராஜகு​மாரர்’, கட்​சிக்​காரர்​களை சந்​திப்​ப​தையே தவிர்த்து வந்த தனது பழைய பாலிசியை மாற்​றிக் கொண்​டு, இப்​போது யார் தன்னை சந்​திக்க வந்​தா​லும் மணிக்​கணக்​கில் உட்​கார​வைத்து மாண்​புடன் கதைக்​கிறா​ராம்.

12-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் தொடர்​பாக மாவட்ட செயற்​குழு கூட்​டத்தை அண்​மை​யில் கூட்டி இருக்​கிறார். திரளான கூட்​டத்​தைக் கூட்​டினால் யாராவது திகிலாகப் பேசி துயரத்​தைக் கூட்​டி​விடக் கூடும் என்று பயந்​தவர், கமுக்​க​மாக அந்​தக் கூட்​டத்தை நடத்தி முடித்​தா​ராம்.

அதனாலேயே பார்ட்டி ஆபீஸை தவிர்த்​து​விட்டு வேறொரு இடத்​தில் அந்​தக் கூட்​டத்தை நடத்​தி​ய​தாக​வும்​ சொல்​கிறார்​கள்​.

மூன்​றாக பிரிக்​கப்​பட்​ட கோழிப்​பண்ணை மாவட்ட சூரியக் கட்சி | உள்குத்து உளவாளி
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in