மீண்டும் இலைக் கட்சிக்கே போக ‘கார்டனார்’ முடிவு? | உள்குத்து உளவாளி

மீண்டும் இலைக் கட்சிக்கே போக ‘கார்டனார்’ முடிவு? | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இலைக் கட்சியில் தாக்குப்பிடிக்க முடியாமல் சூரியக் கட்சிக்கு சூட்கேஸ் தூக்கிய மஞ்சள் மாவட்டத்தின் ‘கார்டன்’ புள்ளியானவர் அங்கேயும் ‘முத்தான’ தலைவர் எடுத்துப் போட்ட முட்டுக் கட்டைகளை தூக்கிப் போட முடியாமல் அண்மையில் போதுமப்பா ‘சாமி’ என்று சொல்லிவிட்டு சூரியக் கட்சிக்கும் குட்பை சொன்னார்.

இதையடுத்து, “இப்போதைக்கு எந்தக் கட்சியிலும் சேரும் திட்டம் இல்லை” என ‘கார்டனார்’ சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரே இருப்பது இரண்டு சாய்ஸ் தான். மீண்டும் இலைக் கட்சிக்கே போவது. அல்லது விசில் கட்சிக்கும் ஒரு விசிட் போய் பார்ப்பது.

ஆனால், “விசில் கட்சிக்குப் போனால் அங்கே ஆணியடித்து அமர்ந்திருக்கும் ‘ஃபோர்ட்’ தலைவர் உங்களை முன்னுக்கு வரவிடமாட்டார். அவருக்கே அங்கு நிலைமை சரியில்லாத போது நீங்களும் போயி என்ன பண்ணப் போறீங்ண்ணா. அதனால நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்கண்ணா” என்று முறுக்கி விடுகிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இப்படி எல்லாம் பீதியைக் கிளப்புவதால் ‘கார்டனார்’ மீண்டும் இலைக் கட்சிக்கே போய்விடும் முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மீண்டும் இலைக் கட்சிக்கே போக ‘கார்டனார்’ முடிவு? | உள்குத்து உளவாளி
‘லீக்’ ஆகிறதா விசில் அரசின் ‘ரெய்டு’ ப்ளான்? | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in