இலைக் கட்சியில் ‘மார்கழி’ சலசலப்பு | உள்குத்து உளவாளி

இலைக் கட்சியில் ‘மார்கழி’ சலசலப்பு | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இலைக் கட்சியில் பெரும்பாலான தொகுதிகளுக்கு யார் யாருக்கெல்லாம் சீட் கொடுக்கலாம் என்பது குறித்து முக்கியப் புள்ளியின் பண்ணை வீட்டில் வைத்து ‘பேசவேண்டிய’ விதத்தில் பேசி பக்காவாக பட்டியல் போட்டு முடித்துவிட்டாராம்.

இருந்த போதும், வெளிப் பார்வைக்காக விருப்ப மனு வாங்க தேதியை அறிவித்திருக்கிறார்களாம். இதில் என்ன சிக்கல் என்றால், விருப்ப மனு கொடுக்க 9 நாட்கள் அவகாசம் அளித்திருந்தாலும் முதல் நாள் மட்டும் தான் முகூர்த்தமான நாளாம். மற்ற எட்டு நாட்களும் மார்கழி மாதத்துக்குள் வந்துவிட்டது.

இந்த நிலையில், 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் எப்படி விருப்ப மனுக் கொடுப்பார்கள். நாள், கிழமை பார்த்து மனு கொடுக்க நினைப்பவர்கள் மார்கழியில் எப்படி மனு கொடுப்பார்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பும் இலைக் கட்சி முக்கிய தலைகள், “அம்மா காலத்தில் விருப்ப மனுவுக்கு டைம் அறிவித்தால் அதில் மூன்று நாளாவது முகூர்த்த நாள் இருக்கும்.

நாத்திகம் பேசும் ஆலயக் கட்சியிலேயே மற்றவர்களின் நம்பிக்கையைக் கெடுக்கக் கூடாது என்பதற்காக, நல்ல நாள் பார்த்துத்தான் இதையெல்லாம் செய்வார்கள்.

கட்சி அலுவலகத்தை விட உயரமான கொடிக்கம்பத்தை கன்னிமூலையில் நட்டதும், தலைவரின் அறையை திருத்தி அமைத்ததும் வாஸ்துப்படிதான்னு சொல்லுவாங்க.

ஆனா, சாஸ்திர சம்பிரதாயங்களை நம்பும் நம்ம கட்சியில இதையெல்லாம் பார்க்காம இப்படி மார்கழி மாசத்துல மனு வாங்குறதா அறிவிச்சிருக்காங்களே” என்று அங்கலாய்க்கிறார்களாம்.

இலைக் கட்சியில் ‘மார்கழி’ சலசலப்பு | உள்குத்து உளவாளி
ஆக்‌ஷன் ஹீரோ கட்சியும் ஈரோட்டுத் தலைவரின் ப்ளானும் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in