

ஜனவரியில் தமிழக அரசியலை தெறிக்கவிடப் போவதாக அலாரம் அடித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டின் தலைவராக ஆக்ஷன் ஹீரோ கட்சியை முன்னேற்ற வந்துள்ளார். இதில் முக்கியமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இலைக் கட்சியின் இரண்டு முக்கிய தலைகளை தூக்கிக் கொண்டு வந்து நிப்பாட்டுவதாக தலைவருக்கு தன்னம்பிக்கை அளித்திருக்கிறாராம்.
அந்த வகையில், அண்மைக் காலமாக ஆலயக் கட்சிக்கு பிரவேசம் செய்யப்போகிறார் என செய்திகள் வருவதும் அடங்குவதுமாக இருக்கும் முன்னாள் ‘ஷாக்’ மாண்புமிகுவின் மனதை பல முனைகளில் இருந்தும் கரையாய் கரைத்துக் கொண்டிருக்கிறாராம் ஈரோட்டுத் தலைவர்.
இதைத் தெரிந்து கொண்டு ஆலயக் கட்சியும் ‘ஷாக்’ மனிதரை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கான ‘இழுப்பு மந்திரங்களை’ முன்னைவிட வேகமாக உச்சரிக்க ஆரம்பித்திருக்கிறதாம்.