‘அன்​பான’ வாரிசுப் பிள்ளை மீது சூரியக் குடும்​பம் வருத்​த​ம் | உள்குத்து உளவாளி

‘அன்​பான’ வாரிசுப் பிள்ளை மீது சூரியக் குடும்​பம் வருத்​த​ம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

தலை​முறை தலை​முறை​யாக சூரியக் குடும்​பத்​துக்கு நெருக்​க​மாக இருக்​கும் ‘அன்​பான’ வாரிசுப் பிள்​ளையை அண்​மைக் கால​மாக சின்​னவருடன் சேர்ந்து பார்க்​க ​முடிய​வில்லை என்​கிறார்​கள். விசில் பார்ட்டி பிடித்து உலுக்கி வரும் பார்ட்டி ஃபண்ட் விவ​காரத்​தில் ‘அன்​பான’ வாரிசுப் பிள்ளை மீது சூரியக் குடும்​பத்​துக்கு சொல்ல முடி​யாத வருத்​த​மாம். படிப்​புத் துறை​யில் வாரிசுப் பிள்​ளையை ஆதா​ர​மாக வைத்து பல பேர் இஷ்டத்​துக்கு ‘வாழ்ந்​திருக்​கிறார்​’ களாம்.

குறிப்​பாக, அவருக்கு உதவி​யாளர் என்று சொல்​லிக் கொண்டு உலா வந்த பிரபல ஐஸ் க்ரீம் கம்​பெனி​யின் பெயர் கொண்​ட​வர் வாரிசுத் தம்​பிக்கே தெரி​யாமல் பல வழிகளி​லும் ‘வளம் கொழித்​து’ விட்​டா​ராம். இந்த விஷ​யம் கொஞ்​சம் லேட்​டாகவே வாரிசுத் தம்​பி​யின் மனை​யாளுக்​குத் தெரிய வந்​த​தாம். “இப்​படி எல்​லாம் செய்ய முடி​யு​மா?” என்று வியந்து போனவர், “இனிமேல் எது​வாக இருந்​தா​லும் நானே பார்த்​துக்​குறேன்” என்று சொல்லி மிஸ்​டர் ‘ஐஸ் க்ரீமை’ மியூட் பண்​ணி​விட்​டா​ராம்.

அதன் பிறகு பல விஷ​யங்​களில் அவரே ‘வரவு செல​வு​களை’ கவனிக்க ஆரம்​பித்​து​விட்​டா​ராம். வாரிசுத் தம்​பி​யின் துறை​யில் நடந்​த​தாகச் சொல்​லப்​படும் ‘கலெக் ஷன் கரப்​ஷன்’ தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட ‘கிங்’ குமாரர் போலீஸ் விசா​ரணை​யில் பல உண்​மை​களை போட்​டுக் கொடுத்​து​விட்​டுத்​தான் உள்ளே உட்​கார்ந்​திருக்​கிறா​ராம். அதனடிப்​படை​யில் மேல் விசா​ரணை தொடர்ந்​தால் வாரிசுத் தம்​பி​யின் தலையை அநி​யா​யத்​துக்கு உருட்​டி​விடு​வார்​களாம்.

இதெல்​லாம் தெரிந்தே அவரைக் கொஞ்​சம் தள்ளி வைத்​திருக்​கிற​தாம் தலை​மைக் குடும்​பம். அதேசம​யம், வாரிசுத் தம்பி இப்​படி ஒதுங்கி இருப்​ப​தை​யும் இந்த வழக்​கில் போலீஸ் அடுத்​தகட்​டத்​துக்கு நகராமல் இருப்​ப​தை​யும் முடித்​துப் போட்​டுப் பேசுபவர்​கள், “ஒரு​வேளை, இவரும் விசில் பார்ட்டி வாஷிங் மெஷினுக்​குள்ள போகப் போறாரோ என்​னவோ” என்​று சந்​தேகம்​ கிளப்​பு​கிறார்​கள்​

‘அன்​பான’ வாரிசுப் பிள்ளை மீது சூரியக் குடும்​பம் வருத்​த​ம் | உள்குத்து உளவாளி
சக்கர வியூ​கத்​தில் சிக்​குவாரா கரூர் தளபதி? | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in