

‘‘சமுத்திரத்தைப் பார்க்க அமர்ந்து அதிகாரம் செலுத்தினால் உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது’’ என்று முதன்மையானவருக்கு வாஸ்து பார்த்து வழியைச் சொன்னது ஆஸ்தான ஜோதிடர்தானாம். அதன்படிதான் தலைவரின் தலைமைச் செயலகம் தற்காலிகமாக பத்தாவது மாடிக்கு மாறுகிறதாம்.
அதேபோல, தலைமை பீடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற பேச்சு வந்தபோது சென்னைப் பட்டினத்தின் ‘பாக்கம்’ ஏரியாவும் பரிசீலனைக்கு வந்ததாம். ஆனால், அந்த இடம் தனக்கு சரிப்பட்டு வராது என தொடக்கத்திலேயே ரிஜெக்ட் செய்துவிட்டாராம் முதன்மையானவர்.
அதிகாரிகளும் அந்த ஏரியாவில் இட நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி அந்த திட்டத்தைக் கைவிட்டு விட்டார்களாம். இந்த சூழலில், ஆஸ்தான ஜோதிடர் தந்த ‘சமுத்திர வாஸ்து’ பலனைக் கேட்ட பிறகு, தலைமை பீடத்தை ‘பாக்கம்’ பகுதிக்கே மாற்ற முதன்மையானவர் இசைவு தெரிவித்துவிட்டாராம்.