ரவுண்டு விட்ட கதர் கட்​சி வாரிசு எம்​.பி | உள்குத்து உளவாளி

ரவுண்டு விட்ட கதர் கட்​சி வாரிசு எம்​.பி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

ஆரம்​பத்​தில் இருந்தே சூரியக் கட்சி மீது கொஞ்​சம் சாஃப்ட் கார்னரில் இருக்​கும் கதர் கட்​சி​யின் அந்த வாரிசு எம்​பி-​யானவர், தனது சீமை தொகு​தி​யில் இரண்டு இடங்​களில் கலை​யரங்​கம் கட்ட தனது தொகுதி மேம்​பாட்டு நிதியை ஒதுக்கி இருந்​தா​ராம்.

ஆனால், ஊரான் வீட்டு நெய்​யில் ஸ்வீட் செய்த கணக்​காய், இவர் ஒதுக்​கிய நிதி​யில் கலை​யரங்​கத்தை கலர்ஃபுல்​லாக கட்டி முடித்த அதி​காரி​கள், அதற்கு விசில் பார்ட்​டி​யின் கொடி கலரில் வர்​ணம் பூசி​விட்​டார்​களாம். கலை​யரங்​கங்​களை ரிப்​பன் வெட்டி திறக்​கப் போன வாரிசு எம்​பி, இதைப் பார்த்​து​விட்டு ஜிவ்​வா​னா​ராம்.

உடனே பக்​கத்​தில் நின்ற பிடிஓ-வை கூப்​பிட்​டு, “ஏங்​க... கலையரங்கத்​துக்கு நிதி ஒதுக்​குனது நானு. நீங்க அவங்க கட்​சிக் கலரை அடிச்சு வெச்​சிருக்​கீங்க. நீங்க ஜால்ரா தட்​டுறதுக்கு நானாங்க ஆளு. எனக்கு இந்த அரசாங்​கத்​தோட விரோதமெல்​லாம் கிடை​யாது. ஆனா, மக்​களுக்கு தவறான தகவலைக் குடுக்​காதீங்க. மொதல்ல இந்த கலர மாத்தி வெள்​ளைப் பெயின்ட அடிங்க” என்று கண்​டிப்​பாகச் சொன்​னா​ராம்.

அத்​தோடு விடா​மல் சொந்​தக் கட்சி சிங்​கங்​களை​யும் கூப்​பிட்டு ரவுண்டு விட்​ட​வர், “நீங்​களெல்​லாம் என்​னய்யா பண்​றீங்​க... எம்பி ஃபண்​டுல வேலை நடக்​குது. என்ன நடக்​குது ஏது நடக்​குதுன்னு பாக்க மாட்​டீங்​களா... இப்​பப் பாருங்க, அவங்க கட்​சிக் கலர அடிச்சு வெச்​சிருக்​காங்க” என்று எகிறி​விட்​டு காரில்​ ஏறி​னா​ராம்​.

ரவுண்டு விட்ட கதர் கட்​சி வாரிசு எம்​.பி | உள்குத்து உளவாளி
‘வணக்கத்துக்குரியவர்’ Vs ‘வினோத’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in