கண்காணிக்கப்படும் ‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு​ | உள்குத்து உளவாளி

கண்காணிக்கப்படும் ‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு​ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு​தான் விசில் ஆட்​சி​யில் முக்​கிய பவர் சென்டராக இருக்​கிறார். ஆனால், அவரது பெயரைச் சொல்​லிக் கொண்டு பல மாவட்​டங்​களில் சிஷ்ய கோடிகள் ‘வாரிக் குவிப்பதாக’ முதன்​மை​யானவரின் முதன்மை அட்​வைஸருக்கு தகவல்​கள் வந்​த​தாம். இதையடுத்து அவர், ‘மகிழ்ச்​சி​யின்’ அசைவுகளைக் கண்​காணிக்க ‘மாப்​பிள்​ளை’ மாண்​புமிகு​வுக்கு சிக்னல் கொடுத்​தா​ராம்.

அதன்​படியே, ‘மகிழ்ச்​சி’​யின் நகர்​வு​கள் குறித்து தனது பரி​வாரங்​கள் மூலம் பக்​கா​வாய் லிஸ்ட் எடுத்து அறிக்கை சமர்ப்​பித்​தா​ராம் மிஸ்டர் ‘மாப்​பிள்​ளை’. இதைக் கேள்​விப்​பட்​டு, “எனக்கே ஸ்பை போடுற அளவுக்கு வந்​துட்​டாங்​களா?” என்று கொந்​தளித்த மிஸ்​டர் ‘மகிழ்ச்​சி’, அதற்​குப் பிறகு ‘மாப்​பிள்​ளை’ உடனான தொடர்​பு​களை குறைத்​துக் கொண்​டா​ராம்.

இதையடுத்​து, சென்​னைக்​குள் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சிகள் உள்ளிட்​ட​வற்​றில் ‘மாப்​பிள்​ளை’ மாண்​புமிகு​வுக்கு முக்​கி​யத்​து​வம் இல்​லாத அளவுக்கு பார்த்​துக் கொள்​ளப்​படு​கிற​தாம். இதில் வேடிக்கை என்​னவென்​றால், ‘மகிழ்ச்​சி​யை’ உளவு பார்க்​கச் சொன்ன அட்​வைஸரும் இப்​போது அந்​தப் பக்​கம் சாய்ந்து கொண்டு சேம் சைடு கோல் போடு​கிறா​ராம்.

இதையடுத்​து, ‘மகிழ்ச்​சி’ சிபாரிசில் மாண்​புமிகு இருக்​கை​யைப் பிடித்​தவர்​கள் சம்​பந்​தப்​பட்ட நெகட்​டீவ் சமாச்​சா​ரங்​களை வெளிச்சத்​துக்கு கொண்டு வரும் வேலை​யில் ஒரு படையே களத்தில் இறங்கி வேலை செய்​கிறதாம்.

நவம்​பர் அல்​லது டிசம்பரில் அமைச்​சர​வையை மாற்றி அமைக்​கும் திட்​டத்​தில் முதன்​மை​யானவர் இருக்​கிறா​ராம். அவரது ஹிட் லிஸ்ட்​டில் இருக்​கும் நான்கு அமைச்​சர்​களில் மூன்று பேர் மிஸ்​டர் ‘மகிழ்ச்​சி​யால்​’ பதவிக்​கு வந்​தவர்​களாம்​.

கண்காணிக்கப்படும் ‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு​ | உள்குத்து உளவாளி
கடல்​ மாவட்​ட கதர்​ கட்​சி வட்​டார சலசலப்பு | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in