அமைச்​சர் அம்மணிகளுக்கு ‘அதிர்வேட்டு’ உள்குத்து உளவாளி

அமைச்​சர் அம்மணிகளுக்கு ‘அதிர்வேட்டு’ உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘அ​வார்டு நகர்’ மாவட்​டத்​தில் ஜூனியர்​களான இரண்டு அம்மணிகளுக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்​புக் கொடுத்த விசில் மேலிடம், ‘மன்​றம்’ காலத்​திலிருந்தே தொட்​டுத் தொடரும் ‘வெல்த்தான’ மாவட்​டப் புள்​ளியைக் கண்​டு​கொள்​ளாமல் விட்​டு​விட்ட​தாம். இதனால் ஓர் அம்​மணி கலந்து கொள்​ளும் நிகழ்ச்சிகளை தொடர்ச்​சி​யாக அவர் புறக்​கணித்து வரு​கிறார். “நீங்கள் ஏன் அமைச்​சர் நிகழ்ச்​சிக்கு வரவில்​லை?” என்று யாராவது கேட்​டால், “வாக்​காளர்​களுக்கு நன்றி சொல்​லப் போயிருந்​தேன்” என கூலாக பொய் சொல்​கிறா​ராம்.

அதேசம​யம், எப்​படி​யா​வது இவரை அமைச்​ச​ராக்கி நாமும் நாலு பேரைப் போல் ஆளாய் பேராய் ‘வளர்ந்​து’ விட வேண்​டும் எனத் துடிக்​கும் ‘வெல்த்​தின்’ விசு​வாசிகள் சிலர், அமைச்​சர் அம்மணிகளுக்கு அதிர்​வேட்டு வைக்​கும் விஷ​யங்​களை சமயம் பார்த்து பப்​ளிக்​படுத்தி வரு​கிறார்​களாம்.

ஏற்​கெனவே ‘ரீல்ஸ் புகழ்’ மந்​திரிக்கு எதி​ராக சர்ச்​சைகள் வெடித்த போதே, ‘அடுத்து நமக்​குத் தான்’ என்று ஆர்ப்​பாட்​டம் காட்​டி​னார்களாம். அது நடக்​க​வில்லை என்​றதும் தற்​போது ‘ஜட்டி மிரட்டல்’ மந்​திரி​யின் பெயர் கெட்டு வரு​வ​தால் அந்த இடமாவது அண்​ணனுக்​குக் கிடைக்​குமா என்று ஆவலோடு எதிர்​பார்த்​துக்​ கொண்​டிருக்​கிறார்​களாம்​.

அமைச்​சர் அம்மணிகளுக்கு ‘அதிர்வேட்டு’ உள்குத்து உளவாளி
‘பெல்​’லுக்கு ஒரு ரவுண்டு ‘பாலீஷ்’ | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in