‘சின்னவர்’ சூளுரையும், விசில் பார்ட்டி வியூகமும் | உள்குத்து உளவாளி

‘சின்னவர்’ சூளுரையும், விசில் பார்ட்டி வியூகமும் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘பட்​ஜெட் கூட்​டத் தொடரில் விசில் அரசாங்​கத்தை ஒரு கை பார்க்காமல் விட​மாட்​டோம்” என சூளுரைத்​திருக்​கிறார் சூரியக் கட்சி ‘சின்​னவர்’. அதற்​கேற்ப அவர் பக்கா ஸ்க்​ரிப்ட்​டுடன் தயா​ராகி இருக்​கும் நிலை​யில், “அவர் என்ன வேண்​டு​மா​னாலும் பேசட்​டும். அதற்​கெல்​லாம் நீங்​கள் பதில் சொல்ல வேண்​டாம். இத்​தனை நாளும் அவங்​களோட இருந்​துட்டு இப்ப நம்ம பக்​கம் வந்​திருக்​கிற நம்​மளோட கூட்​ட​ணிக் கட்​சிகளின் ‘அமைச்​சர் பெரு​மக்​களை’ வெச்சே அவங்​களுக்கு பதிலடி கொடுத்​துக்​கலாம்” என்று முதன்மை​யானவருக்கு ஆலோ​சகர்​கள் அட்​வைஸ் தந்திருக்கிறார்களாம்.

இது தொடர்​பாக கூட்​ட​ணிக் கட்சி அமைச்​சர்​களிடம் விசில் பார்ட்​டி​யின் மூத்த அமைச்​சர்​கள் பேசி​யதற்​கு, “நான் ஓகே” என்று முதல் ஆளாக ஓகே சொல்லி விட்​டா​ராம் சீறும் கட்​சி​யின் அமைச்​சர். ஆனால், கதர் பார்ட்டி அமைச்​சர்​கள், ‘நம்ம ஏதாச்​சும் சொல்​லப் போய் அவங்க எதை​யாச்​சும் இழுத்து விட்​டுட்டா என்ன பண்​றது’ என கொஞ்​சம் ஜெர்க் ஆகிறார்​களாம். இருந்​தா​லும் அவர்​களை​யும் வழிக்​குக் கொண்டு வந்து சின்​னவரை சிலிர்க்க வைக்​கத் தயா​ராகி வரு​கிற​தாம்​ விசில்​ ​பார்​ட்​டி.

‘சின்னவர்’ சூளுரையும், விசில் பார்ட்டி வியூகமும் | உள்குத்து உளவாளி
இலைக் கட்​சி​யின் ‘மணியானவர்’ திட்டம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in