இலைக் கட்​சி​யின் ‘மணியானவர்’ திட்டம் | உள்குத்து உளவாளி

இலைக் கட்​சி​யின் ‘மணியானவர்’ திட்டம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இலைக் கட்​சி​யின் கொங்கு மண்டல ‘மணி​யானவர்’ விழுப்புரத்தாரை நம்பி வீணாக போய்​விட்​டோமே என்று புலம்​பிக் கொண்​டிருக்​கிறா​ராம். எடக்​கானவருக்கு எதி​ராக வீர​வசனம் பேசி புறப்​பட்ட அவர், விசில் பார்ட்​டி​யில் மண்​டலப் பொறுப்​பாளர் அளவி​லான பதவியை எதிர்​பார்க்​கிறா​ராம்.

ஆனால், அத்​தகைய பொறுப்பை இவருக்கு தர அந்​தப் பார்ட்​டி​யில் ரொம்​பவே யோசிக்​கிறார்​களாம். அதேசம​யம், போர்க்​குரல் எழுப்பி புறப்​பட்​டுப் போனவர் போன​தாகவே இருக்​கட்​டும். எக்​காரணம் கொண்​டும் இங்​கேயே தங்​கி​விடக்​கூ​டாது என்​ப​தில் கண்​ணும் கருத்​து​மாக இருக்​கிறார்​களாம் மான்​செஸ்​டர் மாவட்​டத்​தில் புதிதாக பொறுப்​புக்கு வந்​திருக்​கும் இலைக் கட்சி நிர்​வாகி​கள்.

அதனால், கட்சி ஆலோ​சனைக் கூட்​டங்​களில் யாராவது ‘மணி​யானவரின்’ பேச்சை எடுத்​தாலே, “அந்​தப் பேச்​செல்​லாம் இங்க பேசாதீங்​க... உக்​காருங்க. நமக்கு ஒரே தலை​வர் எடக்​கானவர் தான்” என்று அதட்டி உருட்டி உட்​கார​வைத்து விடு​கிறார்​களாம். ஒரு காலத்​தில் ‘மணி​யானவரை’ வைத்து பலனடைந்​தவர்​களே இந்தக் காரி​யத்தை கர்ம சிரத்​தை​யாய் செய்​கிறார்​களாம்.

இதனிடையே, விசில் கட்​சிக்கு போவதற்​குப் பதிலாக மலர் கட்சிக்கு மடை​மாறி​விடலாமா என்ற யோசனை​யும் ‘மணி​யானவருக்​கு’ இருக்​கிற​தாம். அவருக்​குள் இருக்​கும் இந்த சலனத்தைப் புரிந்​து​கொண்டு மலர் கட்​சி​யும் ‘மணி​யானவரை’ இழுத்​துப் போட்டு ‘மவுன்ட்’ தலை​வரின் இடத்தை நிரப்​பும் யோசனை​யுடன் தொடர்ந்து அவருடன்​ டச்​சில்​ இருக்​கிற​தாம்​.

இலைக் கட்​சி​யின் ‘மணியானவர்’ திட்டம் | உள்குத்து உளவாளி
விசில் பார்ட்டிக்கு ‘செக்’ வைக்க மலர் கட்சி முனைப்பு? | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in