தனி​யார் பேருந்​துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு | உள்குத்து உளவாளி

தனி​யார் பேருந்​துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘கோழிப்​பண்ணை மாவட்​டத்​தி​லும், மேங்கோ சிட்டி மாவட்​டத்​தி​லும் ஓடும் தனி​யார் பேருந்​துகள் பலவற்​றில் அறிவிக்​கப்​ப​டாத கட்டண உயர்வை திடீரென அமல்​படுத்தி இருக்​கிறார்​கள். இதுகுறித்து பொது​மக்​கள் தரப்​பில் இருந்து புகார்​கள் பறந்​ததை அடுத்து சம்​பந்​தப்​பட்ட மாவட்​டங்​களின் ஆட்​சி​யர்​கள், தனி​யார் பேருந்​துகளை மறித்து ஆய்​வு​களை நடத்​தினர். கூடு​தல் கட்ட​ணம் வசூலித்​திருப்​பது அந்த ஆய்​வு​களின் போது ஊர்​ஜித​மான​தால் சம்​பந்​தப்​பட்ட பேருந்து முதலா​ளி​களை அழைத்து வார்​னிங் கொடுத்​திருக்​கிறார்​கள் ஆட்​சி​யர்​கள்.

இதையடுத்து தனி​யார் பேருந்து முதலா​ளி​கள் அமைச்​சரைச் சந்​தித்​துப் பேசி தங்​கள் தரப்பு நியா​யத்தை எடுத்​துச் சொல்லி இருக்​கிறார்​கள். அவர்​களின் பேச்​சில் ‘எந்த விதத்​தில்’ அமைச்​சர் சமா​தான​மா​னார் என்று தெரிய​வில்லை. சம்​பந்​தப்​பட்ட பேருந்​துகளில் உயர்த்​தப்​பட்ட பேருந்​துக் கட்​ட​ணங்​களையே இப்​போது மீண்​டும் ‘தில்​லாக’ வசூலித்து வரு​கிறார்​கள். முன்​பு, புகார் வந்​ததும் பேருந்​துகளை மறித்து அதிரடி ஆய்​வு​களை மேற்​கொண்ட ஆட்​சி​யர்​களும் இப்​போது கப் சிப் ஆகி​விட்​டார்​கள்​.

தனி​யார் பேருந்​துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு | உள்குத்து உளவாளி
கதர் பார்ட்டிகளை கலவரப்படுத்த சூரிய கட்சியில் ‘சிக்னல்’ | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in