‘முகம்’ தலை​வர்​ மு​காமின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி

‘முகம்’ தலை​வர்​ மு​காமின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘புரம்’ மாவட்​டத்​தில் இலைக் கட்​சி​யின் ‘புரட்சி மாண்​புமிகு​வாக’ இருந்த ‘முகம்’ தலை​வர் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை​யாக நிற்​கிறா​ராம். விசில் பார்ட்டி தன்னை தூக்கி வைத்​துக் கொண்​டாடும் என நினைத்து தனிப்​படை திரட்​டி​னார்.

ஆனால், அந்த மாவட்​டத்​தில் இருக்​கும் விசில் பொறுப்பாளர்களோ, “இவர உள்ள விட்​டீங்​கன்னா எங்​களை​யும் ‘கிர்ருன்​னு’ சுத்​த​விட்​டுரு​வாரு பாத்​துக்​கோங்க” என்று அலாரம் அடிக்​கிறார்​களாம். இந்த மாவட்​ட​மானது விசில் பார்ட்​டி​யின் ‘மகிழ்ச்​சி’ மந்​திரி அரசாட்சி செய்​யும் மாவட்​டம் வேறு. இதனால் பார்ட்டி தலைமை இவரது என்ட்​ரிக்கு இன்​ன​மும் என்​ஓசி கொடுக்காமல் இழுக்​கிற​தாம்.

இதனிடையே, ‘முகம்’ தலை​வருக்​கும் ராதை​யின் நாயகரு​மான அவரது அண்​ணனுக்​கும் ‘பிளான் பி’ முகவ​ரான ‘சக்​தி​யான’ இலைக் கட்சி பொறுப்​பாளர் அண்​மை​யில் விசில் கட்​சி​யில் சேர்ந்​து​விட்​டார். சேர்ந்​ததோடு மட்​டுமல்​லாது, ‘முகம்’ தலை​வருக்கு பிடிக்​காத எதிர் முகாமைச் சேர்ந்த இலைக் கட்​சி​யின் ‘கண்​ணான’ ஃபை​னான்ஸ் பிர​முகருடன் அதி நெருக்​க​மாக இருக்​கிறா​ராம்.

இதனால் “இந்​தாளு எதுக்கு அங்க போய் ஒட்​டுறான்” எனக் குழம்​பிப் போன ‘முகம்’ தலை​வரும் அவரது அண்​ணனும், மாவட்​டத்​துக்கு வெளி​யில் ‘சக்​தி​யானவர்’ பெயரில் வாங்​கிப் போட்​டிருந்த இரண்டு சொத்​துகளை தங்​களுக்கு வேண்​டிய​வர்​கள் பெயரில் மாற்றி​விட்​டார்​களாம்.

இதே​போல் இன்​னும் சில பினாமி சொத்​துகளை​யும் நிதி ஆதாரங்களை​யும் நைஸாகப் பேசி கைப்​பற்​றும் நோக்​கில் ‘சக்தியானவரை’ அழைத்​தார்​களாம். ஆனால் அவரோ, அந்தா இந்தா என்று இழுக்​கிறா​ராம். இதனால் அண்​ணனும் தம்​பி​யும் கலவரப்​பட்​டுக் கிடக்​கிறார்​களாம். இதையடுத்​து, பிராப்​பர்ட்​டிகள் கைக்கு வரா​விட்டால் ‘கவனிக்க’ வேண்​டிய விதத்​தில் கவனித்து அவற்​றைக் கைப்​பற்​ற​வும்​ தயா​ராகிற​தாம்​ ‘முகம்’ தலை​வர்​ மு​காம்​.

‘முகம்’ தலை​வர்​ மு​காமின் நகர்வுகள் | உள்குத்து உளவாளி
விஜயமானவர் vs மாண்புமிகு ‘மாப்ள’ | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in