‘சமுத்​திரம்’ தொகு​தி ‘அய்யா’வானவரின்​ நிலை | உள்குத்து உளவாளி

‘சமுத்​திரம்’ தொகு​தி  ‘அய்யா’வானவரின்​ நிலை | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

தெற்கே உள்ள ‘சமுத்​திரம்’ தொகு​தி​யில் இலைக் கட்சி சார்​பில் வாகை சூடிய முன்​னாள் மாண்​புமிகு ‘அய்​யா’​வானவர் தனது தொழில் துறை துருப்​பிடிக்​காமல் இருப்​ப​தற்​காக அண்​மை​யில் பனையூர் கட்​சி​யில் ‘பங்​கு​தா​ரர்’ ஆனார்.

இவரோடு சேர்ந்து இவரது சாதி​யைச் சேர்ந்த கட்சி நிர்​வாகி​கள் பலரும் அண்​ணனின் அடி தொட்டு தங்​களின் ‘நிகழ்​கால’ நலன் கருதி விசிலைக் கையில் எடுத்​தார்​கள். ஆனால், அந்​தத் தொகுதியில் விசில் கட்​சி​யில் ஏற்​கெனவே பொறுப்​பில் இருக்​கும் ‘அண்​ணாச்​சிகள்’ இவர்​களின் மீசையைப் பார்த்து மிரள்கிறார்களாம்.

இந்த அழையா விருந்​தாளி​களின் வரு​கையை அவ்​வள​வாய் ரசிக்காத ‘அண்​ணாச்​சிகள்’, கட்சி நிகழ்ச்​சிகளில் இவர்​களை கண்டு கொள்​வதே இல்​லை​யாம். ஆனால், ஏற்​கெனவே உதார்​விட்டே அரசி​யல் நடத்​திப் பழகி​விட்ட ‘அய்​யா’​வின் விசு​வாசிகள் இதை ஏற்க முடி​யாமல், “என்​னலே... கட்சி நிகழ்ச்​சின்னா எங்கள எல்​லாம் கூப்​பிட​மாட்​டியளோ” என்று வந்த இடத்​தி​லும் ‘வார்’ தொடுக்கிறார்களாம்.

இதனால் டரிய​லாகிப் போன விசில் கட்சி ‘அண்​ணாச்​சிகள்’ தங்​கள் கட்​சி​யின் ‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு​வைச் சந்​தித்​து, “அண்​ணாச்​சி... இந்தாளுங்க பண்ற லொம்​பளம் தாங்​க​முடியல அண்​ணாச்​சி. இதுக்கு ஒரு வழியச் சொல்​லுங்க” என்று மூக்​கால் அழு​தார்​களாம்.

இதையடுத்​து, அழையா விருந்​தாளி​களை அழைத்​துப் பேசிய ‘மகிழ்ச்​சி’ மாண்​புமிகு, “த பாருங்​கப்​பா... என்ன இருந்​தா​லும் அவங்க தான் உங்​களுக்கு சீனியர். அதனால அவங்கள எந்​தத் தொந்தர​வும் செய்​யாதீங்க” என்று தனது பாஷை​யில் அறி​வுறுத்தினா​ராம்.

இதையடுத்​து, ‘அய்​யா’ வட்​டாரம் கடந்த சில தினங்​களாக அடக்கிவாசிக்​கிற​தாம். இதனிடையே, மீண்​டும் இந்​தத் தொகுதியில் மிஸ்​டர் ‘அய்​யா’வே களமிறங்​கி​னால் அவரை தோற்கடித்து வீட்​டுக்கு அனுப்ப இலைக் கட்சி தரப்​பில் சத்தமில்லாமல் வேலை​யைத் தொடங்கி விட்​டார்​களாம்.

இந்​தத் தொகு​தி​யில் ‘அய்​யா​வழி’ சமயத்தை பின்​பற்​றும் ‘அண்ணாச்​சிகள்’ கணிச​மாக இருக்​கிறார்​கள். அவர்​களை எல்​லாம் ஒரு​முகப்​படுத்​தி​னாலே வெற்​றிக்கு சாத்​தி​யம் இருக்​கிறது என்கிறார்​கள். அதற்​கான வேலை​யைத்​தான் இலைக் கட்சி தரப்பில் இப்​போது தொடங்​கி இருக்​கிறார்​கள்​.

‘சமுத்​திரம்’ தொகு​தி  ‘அய்யா’வானவரின்​ நிலை | உள்குத்து உளவாளி
விசில் கட்சியில் தனி ஒருவரின் பாதை | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in