‘வர்மக் கலை’ ராஜப் புள்ளியின் ‘பந்தா’ முன்னெடுப்பு | உள்குத்து உளவாளி

‘வர்மக் கலை’ ராஜப் புள்ளியின் ‘பந்தா’ முன்னெடுப்பு | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

“இலைக் கட்சியில் இருந்து அண்மையில் விசில் பார்ட்டியில் கலந்த ‘அவார்டு’ நகர் மாவட்ட ‘வர்மக் கலை’ ராஜப் புள்ளியானவர் சொந்த மாவட்டத்தில் பந்தா காட்டுவதற்காக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.

முதன்மையானவரின் பிறந்த நாளை சாக்காக வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ‘முப்பெரும் விழாவில்’ பத்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப் போவதாகவெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ‘வர்மக் கலை’ புள்ளிக்கு முன்னதாக பனையூர் பார்ட்டியில் இணைந்த அவரது விசுவாசியான ‘வேலான’ ராஜப் புள்ளி செய்து வந்தாராம். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, ‘வர்மக் கலைப்’ புள்ளியும் அவரது விசுவாசிகளும் சர்வீஸ் ரோட்டில் ஒதுங்கிவிட்டார்கள்.

‘வர்மக் கலைப்’ புள்ளியோடு விசில் கட்சியில் இணைந்தவர்களிடம் இந்த நிகழ்ச்சிக்காக தலைக்கு ஒரு லட்சம் வரைக்கும் கேட்டார்களாம். ஆனால் மிஸ்டர் ‘வர்மம்’, “அதெல்லாம் யாரும் குடுக்காதீங்க” என்று தனது விசுவாச வட்டத்தை அலெர்ட் செய்துவிட்டாராம். இதனால், மாநாடு ரேஞ்சுக்கு பேசப்பட்ட அந்த நிகழ்ச்சியை சாதாரண பொதுக்கூட்ட லெவலில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

ஆண்டாள் கோயில் நகருக்குப் பக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ‘மாண்புமிகு’ தலைகள் 5 பேர் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், உள்ளூர் ‘மாண்புமிகு’க்களே தலைக்காட்ட வில்லை. அதனால், லோக்கல் எம்எல்ஏ-வை வைத்து நிகழ்ச்சியை காமா சோமா என்று நடத்தி முடித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த ‘வர்மக் கலை’ ராஜா இப்போது, தாங்கள் திட்டமிட்டபடி தனியாக இன்னொரு நிகழ்ச்சியை நடத்தி பலம்காட்ட ஒரு சார்ட் போட்டுக் கொண்டிருக்கிறாராம்.

‘வர்மக் கலை’ ராஜப் புள்ளியின் ‘பந்தா’ முன்னெடுப்பு | உள்குத்து உளவாளி
வாரிசு எம்.பி.க்கு டஃப் ஃபைட் கொடுக்கும் கதர் பார்ட்டி தலைவர் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in