சூரியக் கட்சியில் முடங்கிய ‘இனிஷியல்’ புள்ளி | உள்குத்து உளவாளி

சூரியக் கட்சியில் முடங்கிய ‘இனிஷியல்’ புள்ளி | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘சூரியக் கட்சி தலைமையானது இந்தத் தேர்தலுக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அதிகபட்சம் 20 ‘சி’ வரைக்கும் தேர்தல் செலவுக்காக ‘உபகாரம்’ செய்தது. தீபம் மாவட்டத்து ‘இனிஷியல்’ மாண்புமிகு தான் இதற்கான ‘பொறுப்பை’ ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், புதிய அரசு, முந்தைய அரசின் டெண்டர்களை ரத்து செய்துவிட்டு புதிதாக டெண்டர் கோரும் முனைப்பில் இருக்கிறதாம். இதனால் டெண்டருக்காக ‘பார்ட்டி ஃபண்ட்’ கொடுத்தவர்கள் ‘இனிஷியல்’ புள்ளியிடம் கொடுத்ததை திருப்பிக் கேட்டு நச்சரிக்கிறார்களாம்.

இந்த விஷயத்தை தலைமையிடம் சொல்லி, “ஏதாச்சும் பண்ணுங்க” என்று கேட்டாராம் ‘இனிஷியல்’. ஆனால், அங்கிருந்து பாஸிட்டிவான பதில் இல்லையாம். இதனால் கடந்த இரண்டு வாரங்களாக எங்கும் மூவ்மென்ட் காட்டாமல் முடங்கி இருக்கிறாராம் ‘இனிஷியல்’.

இதனிடையே, சூரியக் கட்சியின் சிடுசிடு சீனியரை தலைமைக் கழகப் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் ‘மில்க்’ தலைவரை அமர்த்த திட்டமிடும் கட்சித் தலைமை, ‘மில்க்’ தலைவர் தற்போது இருக்கும் பதவியில் ‘இனிஷியல்’ புள்ளியை அமர்த்தி அவரைக் கூல் செய்ய நினைக்கிறதாம். அதேசமயம், ‘மில்க்’ தலைவருக்குப் பதிலாக இளையவரான ‘ராஜ’ புள்ளியை அந்தப் பதவியில் அமர்த்தலாம் என சின்னவர் யோசனை சொல்கிறாராம்.

ஆனால், “மிஸ்டர் ‘மில்க்கை’ தவிர யாருக்காகவும் நான் எனது பொறுப்பை ராஜினாமா செய்ய மாட்டேன்” என்று தன் பங்கிற்கு தடாலடி கிளப்பிக் கொண்டிருக்கிறாராம் சிடுசிடு சீனியர்.

சூரியக் கட்சியில் முடங்கிய ‘இனிஷியல்’ புள்ளி | உள்குத்து உளவாளி
கோவை உட்பட 13 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in