விசில் பார்ட்டி வில்​லாதி வில்லர்கள்​ கைப்பற்றிய ‘ஆவணம்’ | உள்குத்து உளவாளி

விசில் பார்ட்டி வில்​லாதி வில்லர்கள்​ கைப்பற்றிய ‘ஆவணம்’ | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘​மான்​செஸ்​டர் மாவட்​டத்​தில் உள்ள ‘மே​டான’ தொகு​தி​யில் 2021 தேர்​தலில் சூரியக் கட்​சி​யின் ‘சுந்​தர​மான’ வேட்​பாளர் சுமார் 2 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​றுப் போனார். தனக்கு சீட் கிடைக்​காத ஆத்​திரத்​தில் இருந்த ‘கல்​யாண’ ஒன்​றியச் செயலாளரின் ஆதர​வாளர்​களே தனது தோல்விக்​குக் காரணம் என அப்​போது தலை​மைக்கு தகவல் சொன்​னார் ‘சுந்​தர​மானவர்’.

அதேசம​யம் பார்​டரில் ஃபெயி​லான​தால் இம்​முறை​யும் தலைமை தனக்கே சீட்டை ஒதுக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் கடந்த இரண்டு வருடங்​களாக தொகு​திக்​குள் சொந்​தக் காசை செலவு செய்து மக்களை ‘கவனித்​து’ வந்​தார். ஆனால் மாற்றி யோசித்த தலைமையோ, ‘சுந்​தர​மானவருக்கு’ பதிலாக ‘கல்​யாண​மானவரின்’ துணை​வி​யாரை அங்கு நிறுத்​தி​யது. இதனால் வெகுண்​டெழுந்த திரு​வாளர் ‘சுந்​தரம்’, கட்​சிப் பதவியை கடாசி​விட்டு சுயேச்சையாகவே களமிறங்​கி​னார்.

தேர்​தலில் அவருக்கு 27 ஆயிரம் வாக்​கு​களை வாரிவழங்​கிய மக்கள், சுமார் 8 ஆயிரம் வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் ‘கல்யாணமானவரின்’ துணை​வி​யாரை தோற்​கடித்​து​விட்​டார்​கள். தனது சொந்த வாக்​குச் சாவடி​யிலேயே அவரால் சோபிக்க முடியவில்​லை. தேர்​தல் முடிவு​களுக்​குப் பிறகு, எங்கே தவறு நடந்தது என விசா​ரணை நடத்​தி​ய​தாம் சூரியக் கட்சி வட்​டாரம்.

அப்​போது, ‘‘சுந்​தர​மானவர்’ சுத்​துப்​போட்டு வேலை செய்​தது​தான் தோல்விக்​குக் காரணம்” என்று சொன்ன ‘கல்​யாண​மானவர்’ தரப்​பு, வாக்​காளர் ‘கவனிப்​புக்​காக’ தலைக்கு 2 ஆயிரம் வீதம் கொடுத்த பணத்தை எல்​லாம் வாக்​குச் சாவடி பொறுப்​பாளர்​களிடம் முறைப்படி தந்​து​விட்​ட​தாகச் சொன்​னதுடன், பணம் பெற்​றுக் கொண்டு பொறுப்​பாளர்​கள் கையெழுத்​துப் போட்​டுக் கொடுத்த ஆவணத்​தை​யும் சமர்ப்​பித்​த​தாம்.

இந்த நிலை​யில், எப்​படியோ இந்த ஆவணத்​தைக் கைப்​பற்​றிய விசில் பார்ட்டி வில்​லாதி வில்​லர்​கள்​, “சூரியக்​ கட்சி இப்​படி லட்​சம்​ லட்​ச​மாய்​ ஓட்டுக்​குப்​ பணம்​ கொடுத்​ததை​யும்​ மீறி மக்​கள்​ எங்களுக்​கு ஆதர​வளித்​திருக்​கிறார்​கள்​ ​பார்​த்​தீர்​களா” என்​று இப்போது சமூக வலை​தளத்​தில்​ ​வாள்​வீசி வருகிறார்​கள்​.

விசில் பார்ட்டி வில்​லாதி வில்லர்கள்​ கைப்பற்றிய ‘ஆவணம்’ | உள்குத்து உளவாளி
மாநில கதர் பார்ட்டிக்கு புதிய தலைவர் யார்? | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in