விசிலுக்கு தாவிய நால்வரும், கைமாறிய ‘சி’ பின்புலமும் | உள்குத்து உளவாளி

விசிலுக்கு தாவிய நால்வரும், கைமாறிய ‘சி’ பின்புலமும் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இரண்டு வார காலமாக இரண்டுபட்டுக் கிடந்த இலைக் கட்சி முகாம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி வரும் நிலையில், ராஜினாமா செய்த அந்த நால்வர் சமாச்சாரத்தை எளிதில் விடுவதாக இல்லையாம் இலைக் கட்சி தலைமை. அந்த நான்கு பேரும் தேர்தலுக்கு செலவழித்த தொகையை விட இரு மடங்கு பேரம் பேசி ‘வாங்கிக் கொண்டு’ தான் விசில் வியூகம் எடுத்தார்களாம்.

இவர்களுக்கான ‘பரிவர்த்தனைகள்’ ரெட்டி பிரமுகர் மூலமாக அக்கட தேசத்திலேயே அமர்க்களமாக நடந்ததாம். இந்த சமாச்சாரங்களை எல்லாம் மத்திய உளவுத் துறை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து டெல்லிக்கு ’நோட் போட்டிருக்கிறதாம்.

கணக்கு வழக்கு 200 ‘சி’ என்றால் சும்மாவா? அநேகமாக இந்த விவகாரம் தொடர்பாக ‘மலர்’ கட்சியின் ‘மவுன்ட்’ தலைவரிடம் இருந்து சீக்கிரமே அதிரடி அட்டாக் வரலாம் என்கிறார்கள். இதற்கு நடுவே, கொறடா உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்த மனுவுக்கு நடவடிக்கை எடுக்காமல் 4 பேரின் ராஜினாமாவை ஏற்றது தவறு என்று சொல்லியும் இவர்கள் நால்வரும் போட்டியிட்டு வென்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று சொல்லியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய ஆட்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறதாம் இலைக் கட்சி தலைமை.

விசிலுக்கு தாவிய நால்வரும், கைமாறிய ‘சி’ பின்புலமும் | உள்குத்து உளவாளி
முட்டை மாவட்ட மிஸ்டர் கோல்டு நிலை | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in