சூரியக் கட்சி சிடு சிடு சீனியரின் ரியாக்‌ஷன் | உள்குத்து உளவாளி

சூரியக் கட்சி சிடு சிடு சீனியரின் ரியாக்‌ஷன் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

தலைமையிடம் கெஞ்சிக் கூத்தாடி இம்முறை தனது சீட்டை உறுதிப்படுத்திக் கொண்ட சூரியக் கட்சி சிடு சிடு சீனியர், விசில் அலையில் மூன்றாமிடத்துக்குப் போவோம் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையாம். தனது ‘பாடி’ தொகுதியில் சரித்திர சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரன்சிக் கட்டுகளை இறக்கினாராம். அப்படி இருந்தும் விசில் அலைக்கு அவரும் தப்பவில்லை. இருந்த போதும் தொகுதிக்காக அத்தனை செய்து கொடுத்த ‘அவரே’ கரை சேர முடியாத அளவுக்கு கள யதார்த்தம் இருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம்பா.

ஒருவேளை, ‘அவரு’ ஜெயிச்சு நம்ம ஜெயிக்காம போயிருந்தா, ‘இதுக்குத் தான் உங்களுக்கு சீட் தரமாட்டேன்னு சொன் னோம்’னு ஆரம்பிச்சிருப்பாரு” என அப்பாவும் அருமை மகனும் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொண்டு நிம்மதியானார்களாம். இருப்பினும் பூத் வாரியான ‘பட்டுவாடா’ பட்டியலை எடுத்து வைத்துக் கொண்டு, ”இங்கெல்லாம் ‘இவ்வளவு’ போயிருக்கு. ஆனா, அதுக்கேத்தாப்ல நமக்கு ஓட்டுவரலையே” என கட்சி நிர்வாகிகளை கிண்டி கிழங்கெடுத்துக் கொண்டிருக்கிறாராம் ‘ஹேப்பி’ மகன்.

சூரியக் கட்சி சிடு சிடு சீனியரின் ரியாக்‌ஷன் | உள்குத்து உளவாளி
தென் மாவட்ட ‘ராஜ’ மாண்புமிகு சம்பவம் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in