

நரம்பு புடைக்க உலக அரசியலையும் உள்ளூர் அரசியலையும் பேசி இயக்கம் வளர்த்த ‘மலர்ச்சி’த் தலைவர் மீது மானாங்கண்ணியாய் சேற்றை வாரி இறைக்கிறார் அவரால் அண்மையில் இயக்கத்திலிருந்து எக்ஸிட் செய்யப்பட்டவர்.
‘மலர்ச்சி’த் தலைவர் மீது, தான் சொல்லும் ’சொத்துக் குவிப்பு’ குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார் எக்ஸிட் செய்யப்பட்டவர். ஆனால் தங்களின் குடும்பம் பரம்பரையாகவே செல்வச் செழிப்பான குடும்பம் என திசை மாற்றுகிறார் மிஸ்டர் ‘மலர்ச்சி’.
இவரின் தம்பியானவர், போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக ’தடா’லடியாக கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு ஏற்ப, ‘மலர்ச்சி’த் தலைவரின் அரசியல் ’மறுமலர்ச்சிக்கு’ தம்பிக்கு பெரும்பங்கு இருப்பதாகச் சொல்லும் பழைய ’மலர்ச்சி’க் காரர்கள், “பரம்பரை பணக்காரக் குடும்பம் என்றால் தலைவரின் தம்பியும் செல்வச் செழிப்பில் அல்லவா இருக்க வேண்டும்... ஆனால் அவர், கஷ்ட ஜீவனத்தில் இருக்கிறாராமே என்று சந்தேகம் கிளப்புகிறார்கள்.