‘கிங்’ பிரமுகரிடம் ‘டிஸ்டன்ட்’ காட்டும் சூரியக் கட்சி சூரர்கள் | உள்குத்து உளவாளி

‘கிங்’ பிரமுகரிடம் ‘டிஸ்டன்ட்’ காட்டும் சூரியக் கட்சி சூரர்கள் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

சூரியக் கட்சி தலைமைக்கும், தலைமைக் குடும்பத்துக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்கும் விதமாக பேசி ‘ஆடியோ ரிலீஸில்’ சிக்கிய ‘கிங்’ பிரமுகரை சேர்க்கவும் முடியாமல் தள்ளிவைக்கவும் முடியாமல் கட்சி தலைமையில் இருப்பவர்கள் தவிக்கிறார்களாம்.

இந்த நேரத்தில் இவர் மீது கைவைத்தால் அடுத்த கட்ட ஆடியோக்கள் ரிலீஸாகிவிடுமோ என்ற அச்சமும் அதற்குக் காரணமாம். அதனால், கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் அவரது பெயரையும் சேர்த்துவிட்டிருக்கிறதாம் தலைமை.

ஆனால் ஆடியோ ரிலீஸுக்குப் பிறகு, திருவாளர் ‘கிங்’கை நேரில் பார்த்தால் கூட கைகூப்ப தயங்குகிறார்களாம் சூரியக் கட்சியின் சூரர்கள். முன்பு அண்ணனுடன் நெருக்கம் பாராட்டிய பலரும் இப்போது எதுக்குப்பா வம்பு என நினைத்து, கொஞ்சம் டிஸ்டன்ஸ்விட்டு விலகியே நிற்கிறார்களாம்.

இதனால் மிஸ்டர் ‘கிங்’, தானே பலருக்கும் வலிய போன்போட்டு பேசிவருகிறாராம். அப்படியும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் ஜொலிக்கும் அனல் பறக்கும் இந்தப் பேச்சாளர் அண்ணனை பிரச்சாரத்துக்கு அழைக்க சூரியக் கட்சி வேட்பாளர்கள் பலரும் தயங்குகிறார்களாம்.

‘கிங்’ பிரமுகரிடம் ‘டிஸ்டன்ட்’ காட்டும் சூரியக் கட்சி சூரர்கள் | உள்குத்து உளவாளி
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in