

தலைநகர் தொகுதியில் விசில் பார்ட்டியில் போட்டியிடும் ‘லாட்டரி’ மாப்பிள்ளை’யை வீழ்த்த சூரியக் கட்சியின் ‘மாப்பிள்ளை சார்’ குடும்பத்துடன் களமிறங்கி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
அடுத்ததாக சூரியக் கட்சி தலைவரின் மருமகளும் களத்துக்கு வரலாம் என்கிறார்கள். அந்தத் தொகுதியில் சூரியக் கட்சி சார்பில் போட்டியிடும் ‘கார்த்திகை’ பிரமுகர், ‘லாட்டரி மாப்பிள்ளை’, ‘மாப்பிள்ளை சார்’ ஆகிய மூவருக்குமே இன்னமும் தொழில் ரீதியான பந்தங்கள் இருக்கிறதாம்.
ஆனாலும், “விசில் பார்ட்டி தலைவரே ஜெயித்தாலும் பரவாயில்லை. எக்காரணம் கொண்டும் ‘லாட்டரி மாப்பிள்ளை’ ஜெயிக்கக் கூடாது” என மாமியார் தரப்பிலிருந்து உத்தரவாம்.
இதையடுத்தே, ‘மாப்பிள்ளை சார்’ நேரடியாகக் களத்தில் இறங்கிவிட்டாராம். இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருந்தும், “ஸ்டாலின் குடும்பமே வந்து வேலை செய்தாலும் என் தொகுதியில் விசில் வெற்றியை தடுக்க முடியாது” என வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறாராம் வெவரமான ‘லாட்டரி மாப்பிள்ளை’.