

தாமரைக் கட்சியின் ‘மவுன்ட்’ தலைவருக்கு சீட் ஒதுக்கப்படாத விஷயம் அந்தக் கட்சிக்குள் பெரும் பிரளயத்தைக் கிளப்பி இருக்கும் நிலையில், மான்செஸ்டர் நகரின் தெற்கில் இருந்து வடக்கு தொகுதிக்கு மாறி வரும் பெண் தலைவருக்கு எதிராக ‘மவுன்ட்’ தலைவரின் விசுவாசிகள் சோஷியல் மீடியாவில் ‘சொக்கப்பனை’ கொளுத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
“சிட்டிங் தொகுதியில் செல்வாக்கை தக்கவைக்க முடியாத இவங்க எதுக்கு இங்க வர்றாங்க?” என்று கேள்வி எழுப்பும் இவர்கள், ”கட்சிக்காக உழைத்த செல்வாக்கான தலைவருக்கு வாய்ப்புக் கொடுங்கள்” என்று உரிமை நாதம் எழுப்புகிறார்கள். இதனிடையே, பெண் தலைவியிடம் தாமரைக் கட்சி தலைவர்கள் இது விஷயமாக பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.
அதற்கு, “நான் தொகுதியை அவருக்காக விட்டுக் கொடுக்கத் தயார். ஆனால், அதற்குப் பதிலாக தற்போது சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் மத்திய ‘மாண்மிகு’ வைத்திருக்கும் இலாகாவை எனக்கு தரவேண்டும்” என டிமாண்ட் வைத்தாராம்.