சூரியக் கட்சிக்கு தாவும் யோசனையில் தாமரைக் கட்சி தலைகள் | உள்குத்து உளவாளி

சூரியக் கட்சிக்கு தாவும் யோசனையில் தாமரைக் கட்சி தலைகள் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

இலைக் கட்சியிடம் லம்பாக தொகுதிகளை கேட்டு வாங்குவோம் என ஏகப்பட்ட பில்டப்களை கொடுத்து வந்த தாமரைக் கட்சியால் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. அத்தோடு தங்களுக்கு இஷ்டமான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதிலும் கோட்டைவிட்டு விட்டதாம் அந்தக் கட்சி. இதனால் தமிழக தாமரைக் கட்சிக்குள் ‘தடபுடலாக’ மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

‘மவுன்ட் தலைவருக்கு அவருக்கு விருப்பமான தொகுதி கிடைக்காமல் பார்த்துக் கொண்டவர்கள், அவரது விசுவாசிகளில் பலரது தொகுதிகளையும் வலியப் போய் இலைக் கட்சிக்கு பந்தி வைத்து விட்டார்களாம். இது தொடர்பாக ‘ரெட்டி’ தலைவர் ஒருவர் தாமரைத் தலைவரை நிற்க வைத்து கேள்வி கேட்டாராம்.

“மாநிலத்தின் தலைவராக இருந்து கொண்டு உங்கள் தொகுதியையே உங்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாத போது மற்றவர்களுக்கு எப்படி தொகுதிகளை போராடி வாங்கமுடியும்?” என்று கேள்வி எழுப்பினாராம் அந்த ‘ரெட்டி’. இப்படியாக தொகுதிப் பங்கீட்டில் கடும் அதிருப்தியில் இருக்கும் தாமரைக் கட்சியின் பல தலைகள் வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு சுடச் சுட சூரியக் கட்சிக்கு குடிபெயரும் யோசனையில் இருக்கிறார்களாம்.

இதனிடையே, இலைக் கட்சி வேட்பாளர்கள் 169 பேரையும் ஏப்ரல் 4-ம் தேதி மதியம் 12-லிருந்து 12-45 மணிக்குள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என நேரம் குறித்துக் கொடுத்திருக்கிறார்களாம்.

சூரியக் கட்சிக்கு தாவும் யோசனையில் தாமரைக் கட்சி தலைகள் | உள்குத்து உளவாளி
கோவை வடக்கா, மொடக்குறிச்சியா? - அண்ணாமலையின் முடிவுக்காக காத்திருக்கும் பாஜக வேட்பாளர் பட்டியல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in