சூரியக் கட்சியில் இணைய ‘நாச்சியார்’ அம்மணி திட்டம் | உள்குத்து உளவாளி

சூரியக் கட்சியில் இணைய ‘நாச்சியார்’ அம்மணி திட்டம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

மனைவி விவாகரத்து விவகாரத்தில் விசில் தலைவருக்கு எதிராக காரசாரமான கேள்விகளை முன்வைத்த ‘நாச்சியார்’ பெண்மணி. சேதுச் சீமையைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு தாமரைக் கட்சியில் சேதுச் சீமை மாவட்ட தலைநகரில் களப்போராளியாக இருந்தார். மக்களவைத் தேர்தலில் ‘பலாப்பழம்’ தூக்கி வந்த முன்னாள் முதல்வருக்கு ஆதரவாக முன் வரிசையில் நின்று தேர்தல் வேலைகளைக் கவனித்தார்.

ஆனாலும் தாமரைக் கட்சி அவரின் உழைப்பை பெரிதாக அங்கீகரிக்கவில்லையாம். இதையடுத்தே விசில் கட்சிக்கு வீடு மாறினார். அப்படி மாறும் போதே, சேதுச் சீமை தலைநகரில் தான் செய்திருக்கும் களப்பணிகள் குறித்து புக்லெட் ஒன்றை கட்சியின் ‘மகிழ்ச்சி’ தலைவரிடம் அளித்தாராம்.

ஆனால், அதை ரைட்டில் வாங்கி லெஃப்ட்டில் வைத்துவிட்டாராம் கள நிலவரம் தெரியாத மிஸ்டர் ‘மகிழ்ச்சி’. அதுமட்டுமல்லாது, இணைப்பு நிகழ்விலும் ‘நாச்சியாருக்கு’ பிரதான முக்கியத்துவம் ஏதும் இல்லாமல் பத்தோடு பதினொன்றாக நிறுத்தி வைத்தார்களாம். தற்போது சேதுச் சீமைக்கான வேட்பாளர் தேர்விலும் இவரது பெயர் பரிசீலனையிலேயே இல்லையாம்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் ‘பலாப்பழம்’ தூக்கி வந்த தலைவர் அண்மையில் சூரியக் கட்சியில் செட்டிலாகி விட்டார். ஒருவகையில் பார்த்தால் அவருக்கு ‘நாச்சியார்’ பெண்மணி உறவுக்காரராம். இந்த நிலையில், ‘பலாப்பழ’ தலைவர் வழி தொட்டு ‘நாச்சியார்’ அம்மணியும் சூரியக் கட்சியில் இணையும் திட்டத்தில் இருக்கிறாராம்.

சூரியக் கட்சியில் இணைய ‘நாச்சியார்’ அம்மணி திட்டம் | உள்குத்து உளவாளி
காவிக் கட்சிக்குள் காரம் குறையாத ‘மவுன்ட்’ தலைவர் | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in