‘ரிவர்’ தொகுதியில் போட்டியிட ‘சிநேகமானவர்’ திட்டம் | உள்குத்து உளவாளி

‘ரிவர்’ தொகுதியில் போட்டியிட ‘சிநேகமானவர்’ திட்டம் | உள்குத்து உளவாளி
Updated on
1 min read

‘பெரிய கோயில்’ மாவட்டத்தில் உள்ள ‘ரிவர்’ தொகுதியில் சூரியக் கட்சியின் துரையானவர் தற்போது சிட்டிங் எம்எல்ஏ-வாக இருக்கிறார். 1989-ல் ‘நடிகர் சிகரத்தை’ தோற்கடித்த இந்த துரை, அதன் பிறகு மாறி மாறி இந்தத் தொகுதியை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், ‘கை லைட்’ கட்சியின் ‘சிநேகமானவர்’ தனது சொந்த ஊரை உள்ளடக்கிய இந்த ‘ரிவர்’ தொகுதியில் இம்முறை போட்டியிட விருப்பமாய் இருக்கிறாராம். இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, மறைந்த தனது தந்தையின் படத் திறப்பு விழாவை சொந்த ஊரில் விமரிசையாக நடத்தினார் ‘சிநேகமானவர்’.

கட்சியின் தலைவர் ‘நாயகனே’ வந்து இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தே, ‘சிநேகமானவர்’ இந்த ‘ரிவர்’ தொகுதியில் போட்டியிடும் திட்டம் வைத்திருப்பதாக போட்டுடைக்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

ஆனால், கழகத்தின் ‘பெரிய கோயில்’ மத்திய மாவட்ட முதன்மைப் பொறுப்பிலும் இருக்கும் துரையானவரை ஒதுக்கிவைத்துவிட்டு ‘ரிவர் தொகுதியை சிநேகக் கட்சியின் ‘சிநேகமானவருக்காக’ விட்டுக் கொடுக்குமா சூரியக் கட்சி தலைமை என்பது தான் இப்போது டிரில்லியன் டாலர் கேள்வி.

‘ரிவர்’ தொகுதியில் போட்டியிட ‘சிநேகமானவர்’ திட்டம் | உள்குத்து உளவாளி
‘மலைக் கோட்டை’ தொகுதி சூரியக் கட்சி சலசலப்பு | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in