பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்வுகள் நடத்தக்கூடாது: அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு

பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்வுகள் நடத்தக்கூடாது: அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் தனி​யார் பள்ளி வளாகங்​களில் அரசி​யல் சித்​தாந்​தம் மற்​றும் மத ரீதியி​லான நிகழ்​வு​களை நடத்​தக்​கூ​டாது என்ற தமிழக அரசின் உத்​தர​வுக்கு தடை விதிக்க முடி​யாது என உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மறுப்பு தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் உள்ள தனி​யார் பள்​ளி​களில் அரசி​யல் சித்​தாந்​தம் மற்​றும் கொள்கை ரீதி​யாக​வும், மத ரீதி​யாக​வும் எந்​தவொரு நிகழ்​வு​களை​யும் நடத்​தக்​கூ​டாது என தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உத்​தர​விட்​டது.

மேலும், இந்த உத்​தரவு கண்​டிப்​பான முறை​யில் அமல்​படுத்​தப்​படும் என ஆண்​டு​தோறும் ஏப்​.30-ம் தேதிக்​குள் அனைத்து தனி​யார் பள்​ளி​களும் உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும். இல்​லை​யெனில் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் எனவும் உத்​தர​விட்​டிருந்​தது.

தமிழக அரசி்ன் இந்த உத்​தரவை எதிர்த்து வேலூரில் உள்ள சரஸ்​வதி வித்​யாலயா மெட்​ரிக் மேல்​நிலைப்​பள்ளி மற்​றும் சென்​னையை சேர்ந்த ஸ்ரீ காம​ராஜ் வித்​யாலயா தொடக்​கப் பள்​ளி​கள் சார்​பி்ல் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தன.

அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில், “தமிழக அரசின் உத்​தரவு அடிப்​படை உரிமை​களை மீறும் வகை​யில் உள்​ளது. சட்​ட​விரோத​மானதும்​கூட. பள்ளி விடு​முறை நாட்​களி​லும், பள்ளி நேரம் முடிந்​த​பிறகும் தனி​யார் சார்​பில் எந்த நிகழ்ச்​சிகளை​யும் நடத்​தக்​கூ​டாது என ஒட்​டுமொத்​த​மாக தடை விதிக்க முடி​யாது.

அரசின் இந்த உத்​தரவை அமல்​படுத்​த​வில்லை என்​றால் பள்​ளி​களின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என அரசு எச்​சரிக்கை விடுப்​பது ஏற்​புடையதல்ல என்​ப​தால் அரசின் உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும்” என வாதிடப்​பட்​டது.

வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள், தனி​யார் பள்​ளி​களில் அரசி​யல் மற்​றும் மத ரீதியி​லான நிகழ்​வு​களை நடத்​தக்​கூ​டாது என்ற அரசி்ன் உத்​தர​வுக்கு தடை விதிக்க மறுப்பு தெரி​வித்​தனர்.

அதே​நேரம் இந்த உத்​தரவை அமல்​படுத்​து​வது தொடர்​பாக ஆண்​டு​தோறும் ஏப்​.30-க்​குள் உத்​தர​வாதம் அளிக்க வேண்​டுமென்ற அரசின் உத்​தர​வுக்கு மட்​டும் இடைக்​காலத்​தடை விதித்​துள்​ளனர். மேலும், இந்த வழக்​கில் தமிழக அரசு தரப்​பில் 4 வார காலத்​துக்​குள் பதிலளிக்க வேண்​டும் என அறி​வுறுத்தி விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்வுகள் நடத்தக்கூடாது: அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு
“பிரதமர் மோடியை விட பெரிய பெண்ணியவாதி இருக்க முடியாது” - கங்கனா புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in