அரசு வால்வோ பேருந்தில் வாரன்ட் வைத்திருக்கும் போலீஸார் பயணிக்கலாம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: அரசு வால்வோ பேருந்​துகளில் வாரன்ட் வைத்​திருக்​கும் காவல்​துறை​யினர் பயணிக்​கலாம் என விரைவு போக்​கு​வரத்து கழகம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அனைத்து கிளை மேலா​ளர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​: அரசு விரைவு போக்​கு​வரத்து கழகம் சார்​பில், தற்​போது 20 வால்வோமல்டி ஆக்​சில் பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இவற்​றில் வாரன்ட் ஆவணத்​துடன் பயணிக்க அனு​ம​திக்க வேண்​டும் என போலீ​ஸார் கோரிக்கை முன்​வைத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், போலீ​ஸாரின் கோரிக்​கையை ஏற்க முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, வால்வோ மல்டி ஆக்​சில் பேருந்​துகளில் வாரன்ட் ஆவணத்​துடன் இனி போலீ​ஸார் பயணிக்​கலாம். இந்த தகவலை அனைத்து ஓட்​டுநர்​கள் மற்​றும் நடத்​துநர்​களுக்கு கிளை மேலா​ளர்​கள் தெரியப்​படுத்த வேண்​டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
ஊழலற்ற தமிழகம் உருவாவதே முழு சுதந்திரம்: சுதந்திர தின உரையில் முதல்வர் விஜய் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in