தவெக வேட்பாளர் தாக்கப்பட்ட விவகாரம்: சேகர்பாபுவிடம் போலீஸார் 4 மணி நேரம் விசாரணை

தவெக வேட்பாளர் தாக்கப்பட்ட விவகாரம்: சேகர்பாபுவிடம் போலீஸார் 4 மணி நேரம் விசாரணை
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது தவெக வேட்​பாளர் தாக்​கப்​பட்ட விவ​காரத்​தில் திமுக முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு​விடம் சென்னை போலீ​ஸார் 4 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சென்னை துறை​முகம் தொகு​தி​யில் திமுக சார்​பில் முன்​னாள் அமைச்​சர் சேகர்​பாபு​வும், தவெக சார்​பில் சினோரா அசோக்​கும் போட்​டி​யிட்​டனர்.

இதில் சேகர்​பாபு வெற்றி பெற்​றார். முன்​ன​தாக, வாக்​குப்​ப​திவு நடை​பெற்ற ஏப்​.23-ம் தேதி, மண்​ணடி அங்​கப்ப நாயக்​கன் தெரு​வில் இரு தரப்​பினர் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, தள்​ளு​முள்​ளாக மாறியது.

அப்​போது, சேகர்​பாபு தன்​னைத் தாக்​கிய​தாக சினோரா அசோக் வடக்கு கடற்​கரை காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தார். அதே​போல, சேகர்​பாபு தரப்​பில் இருந்​தும் எதிர்​தரப்​பினர் மீது புகார் அளிக்​கப்​பட்​டது.

சினோரா அசோக் அளித்த புகாரின் அடிப்​படை​யில், சேகர்​பாபு மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் மீது சட்​ட​விரோத​மாக கூடு​தல், ஆபாச​மாக பேசுதல், காயம் விளை​வித்​தல், கொலை முயற்​சி, கொலை மிரட்​டல் உள்​ளிட்ட 7 பிரிவு​களின்​கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர்.

இந்த வழக்கு தொடர்​பாக விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு சேகர்​பாபுவுக்கு போலீ​ஸார் சம்​மன் அனுப்​பினர். இதைத் தொடர்ந்​து, சென்னை வடக்கு கடற்​கரை காவல் நிலை​யத்​தில் சேகர்​பாபு நேற்று காலை 11 மணி அளவில் விசா​ரணைக்​காக ஆஜரா​னார்.

சினோரா அசோக் தாக்​கப்​பட்​டது குறித்து அவரிடம் போலீ​ஸார் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பினர். மதி​யம் 3 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடை​பெற்ற வி​சா​ரணைக்​குப்​ பிறகு, சேகர்​பாபு புறப்​பட்​டுச்​ சென்​றார்​.

தவெக வேட்பாளர் தாக்கப்பட்ட விவகாரம்: சேகர்பாபுவிடம் போலீஸார் 4 மணி நேரம் விசாரணை
டாஸ்மாக் கடைகளில் மதுபான தேவை பட்டியல் சமர்ப்பிப்பதில் செப்.1 முதல் புதிய நடைமுறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in