டாஸ்மாக் கடைகளில் மதுபான தேவை பட்டியல் சமர்ப்பிப்பதில் செப்.1 முதல் புதிய நடைமுறை

டாஸ்மாக் கடைகளில் மதுபான தேவை பட்டியல் சமர்ப்பிப்பதில் செப்.1 முதல் புதிய நடைமுறை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் தற்​போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் இயங்கி வரு​கின்​றன. இந்தக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​கள் 11 நிறு​வனங்​களிடம் இருந்​தும், பீர் வகைகள் 7 நிறு​வனங்​களிடம் இருந்​தும் கொள்​முதல் செய்​யப்​படு​கின்​றன.

இதனிடையே கடந்த ஆட்சிக் காலங்​களில் சில குறிப்​பிட்ட நிறு​வனங்​களிடம் இருந்து மட்​டுமே அதி​கள​வில் மது​பானம் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் கூறப்​பட்​டன.

இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன் அனைத்து நிறு​வனங்​களிடம் இருந்​தும் சமமான அளவில் மது​பானம் கொள்​முதல் செய்​யப்​படும் என்​றும் டாஸ்​மாக் சில்​லறை விற்​பனை கடைகளி​லும் அனைத்து நிறு​வனங்​களின் மது​பானங்​களும் சம அளவில் விற்​கப்​படும்

எனவும் டாஸ்​மாக் நிர்​வாகம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் வரும் செப்​.1-ம் தேதி முதல் அனைத்து கடைகளி​லும் மது​பான தேவைபட்​டியலை ஆன்லைன் செயலி மூலம் அனுப்​பும் நடை​முறையை டாஸ்​மாக் நிர்​வாகம் தொடங்​க​வுள்​ளது.

இது குறித்து அனைத்து முது​நிலை மண்டல மேலா​ளர்​கள், மாவட்ட மேலா​ளர்​கள் மற்​றும் கிடங்கு மேலா​ளர்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: டாஸ்​மாக் சில்​லறை விற்​பனை கடைகளில் கையடக்க கருவி வாயி​லாக அந்த கடைக்​கான தேவைப்​பட்​டியலை ஆன்​லைன் முறை​யில் பெறும் நடை​முறை தொடங்​கப்​பட​வுள்​ளது.

இந்த ஆன்​லைன் முறை​யில் அனைத்து வகை மற்​றும் பிராண்​டு​களின் மது​பானங்​கள் தானாகவே சம அளவில் தேவை பட்​டியலில் இருக்​கும். கடை​யின் மேற்​பார்​வை​யாளர் அதை பார்த்து தேவை இருக்​கும் பட்​சத்​தில் கூடு​தலாக பட்​டியலில் சேர்க்​கலாம்.

ஒரு குறிப்​பிட்ட பிராண்ட் மற்​றும் மது​வகையை கூடு​தலாக 20 சதவீதம் சேர்க்​கலாம். ஆனால் தேவை பட்​டியலில் இருந்து எதை​யும் நீக்க முடி​யாது.

தேவை பட்​டியலை சமர்​ப்பிக்க கடை​யின் அதி​காரப்​பூர்வ செல்​போன் எண்ணை பதி​விட்டு அதில் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்​டும்.

கடை மேற்​பார்​வை​யாளர் சமர்ப்​பிக்​கும் தேவைப்​பட்​டியலே இறு​தி​யான​தாக கருதப்​படும். முன்​ன​தாக இந்த தேவைப்​பட்​டியலை நேரடி​யாக கடை மேலா​ளர் மாவட்ட மேலா​ளர் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்க வேண்​டும்.

தற்​போது இந்த ஆன்​லைன் நடை​முறை​யால் நேரில் செல்ல வேண்​டிய அவசி​யம் இல்​லை. இந்த நடை​முறை​கள் குறித்து அனைத்து கடை மேற்​பார்​வை​யாளர்​களும் அறிந்​திருப்​பதை மாவட்ட மேலா​ளர்​கள் உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு சுற்​றறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபான தேவை பட்டியல் சமர்ப்பிப்பதில் செப்.1 முதல் புதிய நடைமுறை
பரந்தூர் விவசாயிகளின் நிலங்களை திருப்பித் தருவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in