மடப்புரம் அஜித்குமார் வழக்கை ரத்து செய்ய காவல் ஆய்வாளர் மனு: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் அஜித்குமார் வழக்கை ரத்து செய்ய காவல் ஆய்வாளர் மனு: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் காவல் மரணம் வழக்கை ரத்து செய்​யக்​கோரி காவல் ஆய்​வாளர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் நகை திருட்டு வழக்​கில் தனிப்​படை காவலர்​களால் விசா​ரணைக்​காக அழைத்​துச் செல்​லப்​பட்டு உயி​ரிழந்​தார். இந்த வழக்​கில் தனிப்​படை காவலர்​கள் 6 பேரை சிபிஐ கைது செய்​தது.

கூடு​தல் குற்​றப்​பத்​திரி​கை​யில் மானாமதுரை டிஎஸ்பி சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார் உட்பட 4 பேர் குற்​ற​வாளி​களாகச் சேர்க்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் தன் மீதான வழக்கை ரத்து செய்​யக்​கோரி காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

அதில், மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மாரை நகை திருட்டு வழக்​கில் தனிப்​படை காவலர்​கள் விசா​ரணைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். தனிப்​படை காவலர்​கள் விசா​ரணை​யில்​தான் அஜித்​கு​மார் உயி​ரிழந்​துள்​ளார்.

இதற்​கும் காவல் ஆய்​வாள​ராக இருந்த எனக்​கும் தொடர்பு இல்​லை. இருப்​பினும் சிபிஐ கூடு​தல் குற்​றப்​பத்​திரிக்​கை​யில் என்னை ஒரு குற்​ற​வாளி​யாக சேர்த்​துள்​ளது. இதற்கு போலி​யாக பல ஆவணங்​கள் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன.

இதனால் அஜித்​கு​மார் காவல் மரணம் தொடர்​பாக என் மீதான வழக்​கு, குற்​றப்​பத்​திரி​கையை ரத்து செய்​தும், விசா​ரணை நீதி​மன்​றத்​தில் ஆஜராக விலக்கு அளித்​தும் உத்​தர​விட வேண்​டும்.

இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது. மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​து, மனு தொடர்​பாக சிபிஐ டிஎஸ்பி பதிலளிக்க உத்தர​விட்டு விசா​ரணையை தள்​ளி​வைத்​தார்.

மடப்புரம் அஜித்குமார் வழக்கை ரத்து செய்ய காவல் ஆய்வாளர் மனு: சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈவிஎம்: கற்பிதங்களும் நிதர்சனமும் | சொல்... பொருள்... தெளிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in