சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் மனு: பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தல்

சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் மனு: பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: ஜாமீனை ரத்து செய்​யக்​கோரி போலீஸார் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மனுவுக்​கு, இன்று பிற்​பகலுக்​குள் பதில் ​மனு தாக்​கல் செய்​யா​விட்​டால் உரிய உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும் என சவுக்கு சங்​கர் தரப்​புக்கு நீதிப​தி​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

பிரபல யூடியூபரும், சவுக்கு மீடியா முதன்மை செயல் அதி​காரி​யு​மான சவுக்கு சங்​கர் மீது ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீஸார் பதிவு செய்த மோசடி வழக்​கு​களில் அவரை கடந்த டிச.13-ம் தேதி கைது செய்​தனர்.

தனது மகனுக்கு மருத்​துவ காரணங்​களுக்​காக ஜாமீன் வழங்க வேண்​டுமென சவுக்கு சங்​கரின் தாயார் கமலா தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சவுக்கு சங்​கருக்கு மார்ச் 25 வரை இடைக்​கால ஜாமீன் வழங்​கி​யுள்​ளது.

இந்​நிலை​யில், சவுக்கு சங்​கருக்கு வழங்​கப்​பட்​டுள்ள இடைக்​கால ஜாமீனை ரத்து செய்​யக்​கோரி சைதாப்​பேட்டை காவல் ஆய்​வாளர் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது.

அதில், ‘மருத்​துவ காரணங்​களைக்​கூறி ஜாமீன் பெற்​றுள்ள சவுக்கு சங்​கர் நிபந்​தனை​களை மீறி வீடியோ பதிவு​களை போட்டு வரு​கிறார். எனவே, அவருக்கு வழங்​கப்​பட்​டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்​டும். அவரது உடல்​நிலையை கண்​காணிக்க மருத்​து​வக்​குழுவை அமைக்​க​வும் தயா​ராக இருக்​கிறோம்’ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மனுவை ஏற்​கெனவே விசா​ரித்த நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக சவுக்கு சங்​கர் தரப்​பில் பதில்​மனு தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டிருந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நேற்று இதே அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சவுக்கு சங்​கர் தரப்​பில் பதில்​மனு தாக்​கல் செய்​ய​வில்​லை. மேலும், வழக்கை இந்த அமர்வு விசா​ரிக்க வேண்​டாம் என்​றும், வழக்கை வேறு அமர்​வுக்கு மாற்​றக்​கோரி மனு அளித்​துள்​ள​தாக​வும் சவுக்கு சங்​கர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘இந்த நீதி​மன்​றத்தை அச்​சுறுத்தி பார்க்​கும் தொணி​யில் செயல்பட வேண்​டாம். மனசாட்​சிக்கு மட்​டும்​தான் பயப்​படு​வோம். நாங்​கள் இந்த வழக்​கில் இருந்து வில​கப் போவ​தில்​லை.

வேண்​டுமென்​றால் நீங்​கள் தலைமை நீதிப​தி​யிடம் முறை​யிட்டு நிவாரணம் பெற்​றுக்​கொள்​ளுங்​கள். நாளை (இன்​று) பிற்​பகலுக்​குள் இந்த வழக்​கில் பதில்​மனு தாக்​கல் செய்​ய​வில்லை என்​றால் வழக்​கின் தகு​தி​யின் அடிப்​படை​யில் உரிய உத்​தரவை பிறப்​பிப்​போம்’’ என சவுக்கு சங்​கர் தரப்​புக்கு அறி​வுறுத்​தி வி​சா​ரணை​யை தள்​ளி ​வைத்​துள்​ளனர்​.

சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் மனு: பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தல்
அரசு பேருந்தில் ‘தமிழ்நாடு’ என அச்சிட கோரி வழக்கு: போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in