தவெக எம்எல்ஏக்கள் தங்கியிருப்பதால் பூஞ்சேரியில் போலீஸ் குவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

மாமல்​லபுரம்: பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற எம்​எல்​ஏக்​கள் 2-வது நாளாக தங்​கவைக்​கப்​பட்​டுள்​ள​தால் பாது​காப்பு பணி​க்காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் 234 தொகு​தி​களுக்​கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற்​றது. மேலும், வாக்கு எண்​ணிக்கை கடந்த 4-ம் தேதி நடை​பெற்​றது. இதில், தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற 108 சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் சென்​னையை அடுத்த பனையூரில் உள்ள தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலைமை அலு​வல​கத்​தில், தலை​வர் விஜய் தலை​மை​யில் நடை​பெற்ற ஆலோ​சனை கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

பின்​னர், அங்​கிருந்து புறப்​பட்ட 80 எம்​எல்​ஏக்​கள் மாமல்​லபுரத்தை அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் அமைந்​துள்ள போர் பாயிண்ட் என்ற தனி​யார் நட்​சத்​திர விடு​திக்கு வருகை தந்​தனர். மேலும், தவெக ஆட்சி அமைக்​கும் வரை இந்த விடு​தி​யில் தங்​கு​வதற்​கான அனைத்து ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அக்​கட்​சி​யினர் தெரி​வித்​தனர். மேலும், தவெகவை சேர்ந்த எம்​எல்​ஏக்​கள் தங்​கி​யுள்​ள​தால் விடு​தி​யின் முகப்பு பகு​தி​யில் 2-வது நாளாக பாது​காப்பு பணிக்​காக ஏராள​மான போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். மேலும், ஈசிஆர் சாலை​யில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு விஜய் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in