“​திமுக​ கூட்டணிக்கு பாமக வர வாய்ப்பு இல்லை” - வேல்முருகன் தகவல்

வேல்முருகன் | கோப்புப்படம்
வேல்முருகன் | கோப்புப்படம்
Updated on
1 min read

திமுக​வுடன் கூட்​ட​ணிக்கு ராம​தாஸ் தலை​மையி​லான பாமக வரு​வதற்கு வாய்ப்​பு​கள் இல்​லை. இந்த முறை கூடு​தல் இடங்​களில் போட்​டி​யிட திமுக​விடம் கேட்க இருப்​ப​தாக தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன் தெரி​வித்​தார்.

திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கட்​சி​யின் கட்​டமைப்​புப் பணி​களுக்​காக தென் மாவட்​டங்​களில் ஒரு வார கால சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரு​கிறேன். திமுக தலை​மையி​லான கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்தை தற்​போது நடந்து வரு​கிறது. எனது திட்​ட​மிட்ட பயணங்​கள் முடிவடைந்த பிறகு, கூட்​டணி மற்​றும் தொகு​திப் பங்​கீடு குறித்து விரி​வாகப் பேச்​சு​வார்த்தை நடத்​து​வோம்.

மக்​கள் மிக​வும் கவன​மாக வாக்​களிக்க வேண்​டும். பாஜக 10 ஆண்​டு​களில் கணிச​மான வளர்ச்​சியை பெற்​றுள்​ளது. பாஜகவை தமிழகத்​தில் காலூன்ற விடக்​கூ​டாது என்ற அடிப்​படை​யில் தொடர்ந்து செயல்​பட்டு வரு​கிறேன். திமுக கூட்​ட​ணி​யோடு ராம​தாஸ் தலை​மையி​லான பாமக வரு​வதற்கு வாய்ப்​பு​கள் இது​வரை தென்​பட​வில்​லை. இந்த முறை திமுக கூட்​ட​ணி​யில் உரிய அங்​கீ​கார​மும் மரி​யாதை​யும் அளிப்​பார்​கள் என்று எதிர்​பார்க்​கிறேன்.

கடந்த தேர்​தலை விட இந்த தேர்​தலில் கூடு​தல் இடங்​களை திமுக கூட்​ட​ணி​யில் கேட்க இருக்​கிறோம். அனைத்து இடங்​களி​லும் தீவிர​மாக உறுப்​பினர் சேர்க்கை நடத்​தப்​பட்டு எங்​கள் கட்​சி​யின் கட்​டமைப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

வேல்முருகன் | கோப்புப்படம்
“தனித்து​ விடப்பட்டவர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்” - டிடிவி வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in