பாமக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை: ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள் தகவல்

எம்எல்ஏ அருள்.

எம்எல்ஏ அருள்.

Updated on
1 min read

சேலம்: தவெக-வுடன் கூட்​டணி அமைப்​பது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடந்து வரு​கிறது என்று ராம​தாஸ் தரப்பு பாமகவைச் சேர்ந்த சட்​டப்​பேரவை உறுப்​பினர் அருள் கூறி​னார்.

சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அரசி​யல் கட்​சிகள் பல கட்​சிகளு​டன் கூட்​டணி தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்​து​வது இயல்​பு​தான். பாமக நிறு​வனர் ராம​தாஸ் தலை​மை​யில் தமிழகத்​தில் வலு​வான கூட்​டணி அமை​யும். ராம​தாஸ் யாரை கை காட்​டு​கிறாரோ, அவர்​தான் முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​று, ஆட்சி அமைப்​பார். இன்​னும் ஒரு வாரத்​தில் கூட்​டணி இறுதி செய்​யப்​படும். அரசி​யலுக்கு யார் வேண்​டு​மா​னாலும் வரலாம்.

மக்​கள் ஆதர​வுதான் முக்​கி​யம். தவெக தலை​வரை இளைஞர்​கள் தேனீக்​கள்​போல மொய்த்து வரு​கின்​றனர். அவருக்கு வாக்​களித்​து, தமிழகத்​தின் முதல்​வ​ராக்க மக்​கள் முடிவு செய்​து​விட்​டால், அதையாரால் தடுக்க முடி​யும். அரசியல் களத்​தில் யாரை​யும் குறைத்து மதிப்​பிடக்கூடாது.

பணத்தை கொடுத்து வாக்​குகளை வாங்​கி​விடலாம் என்று கரு​தி​னால் ஏமாற்​றம்​தான் கிடைக்​கும். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மூன்​றாவது அணி உரு​வாவதில் எந்த தவறும் இல்​லை. திமுக, அதி​முக மட்​டுமே ஆட்சி செய்ய வேண்​டும் என்ற அவசி​ய​மும் இல்​லை. தவெக​வுடன் கூட்​டணி அமைப்​பது தொடர்​பாக பேச்​சு​வார்​த்​தை நடந்​து வரு​கிறது. இவ்​​வாறு சட்​டப்​பேரவை உறுப்​பினர் அருள்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p>எம்எல்ஏ அருள்.</p></div>
234 தொகுதிகள்... 20 நட்சத்திரப் பேச்சாளர்கள் - ஒரு மாத பரப்புரைக்குத் தயாராகும் திமுக

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in