

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக வழக்கில் டெல்லி நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.
யார் பாமக தலைவர் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால், மாம்பழம் சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. மாம்பழம் சின்னம் பறிபோனது வேதனை அளிக்கிறது. மீண்டும் சின்னத்தை மீட்டு தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவோம்.
தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல்களை கொடுத்தவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அன்புமணி பாமக தலைவர் இல்லை. அவருக்கும் பாமக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ராமதாஸின் மகன் என்பதை தவிர பாமக-வுக்கும் அவருக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. தேர்தல் கூட்டணி குறித்து ராமதாசுடன் மட்டுமே கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அன்புமணியுடன் கூட்டணி குறித்து பேசி ஏமாற வேண்டாம் என்றார்.