அதிமுக, பாமக கூட்டணி உறுதியானது: டெல்லி புறப்பட்டு சென்றார் பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி நேற்று சந்தித்தார். உடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி நேற்று சந்தித்தார். உடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர்.

Updated on
2 min read

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன், பாமக தலைவர் அன்புமணி சென்னையில் நேற்று சந்தித்த நிலையில், அதிமுக- பாமக கூட்டணி உறுதியானது. இந்த பரபரப்பான சூழலில் பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்து சென்ற நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அவரது தமிழக வருகையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார். அடுத்த நாளே பழனிசாமி, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பித்து நடவடிக்கை கோரினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பழனிசாமியை, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணி நேற்று காலை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அதிமுக – பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பிறகு பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருகின்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஏற்கெனவே அதிமுக- பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. தற்போது எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இருக்கும் எங்கள் கூட்டணியில் மேலும்சில கட்சிகள் விரைவில் சேர்க்கப்படும்.

எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி, வெற்றிக்கூட்டணி. இரு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்பியவாறு இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கும் ஒரு அரசாக, எங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். அதற்கு அதிமுக, பாஜக, பாமக ஆகிய 3 கட்சிகளும் இணைந்து தேனீக்களைப்போல இரவு பகல் பாராமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த கூட்டணியில் பாமகவுக்கான தொகுதிகள் எண்ணிக்கையை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். மற்றவற்றை பிறகு அறிவிப்போம்.

அதனைத் தொடர்ந்து அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது. எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். இது வலுவான கூட்டணி.

மக்கள் விரோத, பெண்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிரான, ஊழல் செய்யும் ஆட்சி, அரசு ஊழியர்கள், மாணவர்கள், மீனவர்கள் தொழிலாளர்கள் என அத்தனை உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரான ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்க இருக்கின்றோம்.

அண்மையில் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. தேர்தல் எப்போது வரும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பாஜக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, பாமக சார்பில் கடந்த 2021 தேர்தலின்போது ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளை விட அதிகமாக அன்புமணி கேட்டதாக கூறப்படுகிறது. அவரது தந்தை ராமதாஸூம் பாமக-வை நடத்தி வருவதாக கூறுகிறார். அவருக்கு பின்னாலும் சில எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் இருக்கின்றனர். இந்த சூழலை விளக்கி கூறிய பழனிசாமி, இந்த தேர்தலில் அன்புமணிக்கு 18 சட்டப்பேரவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி பயணம்: இந்த சந்திப்பைத் தொடர்ந்து பழனிசாமி நேற்று பிற்பகல் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முகாமிட்டுள்ளார். அங்கு, அமித் ஷாவை பழனிசாமி சந்தித்து, ஆளுநரிடம் வழங்கிய திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை அளித்து, நடவடிக்கை கோர இருப்பதாகவும், கூட்டணியில் பாமக இணைந்திருப்பது மற்றும் அக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் தெரிவிக்கஇருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாகவும், அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

<div class="paragraphs"><p>அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை பாமக தலைவர் அன்புமணி நேற்று சந்தித்தார். உடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பாமக வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர்.</p></div>
“பாமக அங்கம் வகிப்பது கூடுதல் பலம்” - மத்திய இணை அமைச்சர் எல்​.​முருகன் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in