

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிப்பது கூடுதல் பலம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் திமுக அரசின் போலி முகம் வெளிப்பட்டுவிட்டது.
இந்த விவகாரத்தில் திமுக அரசும், மாவட்ட நிர்வாகமும் முறையாகசெயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், இரட்டை நிலைப்பாடுஎடுத்தார்கள். நீதிமன்றத் தீர்ப்பைநிறைவேற்றவில்லை. தற்போதைய மதுரை அமர்வு தீர்ப்பு.திமுக அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. இந்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் பக்தர்கள் சென்று தீபம் ஏற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். பெருமாநல்லூர் அருகே கோயில் அகற்றுவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாக்கப்பட்டிருப்பதை கண்டிக்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் பாமக ஏற்ெகனவே இடம் பெற்றுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை இணைந்தே சந்தித்தோம். தற்போது தேஜ கூட்டணியில் பாமக அங்கம் வகிப்பது கூடுதல் பலத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அசைக்க முடியாத சக்தி: பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவைவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுக அவதூறு செய்து கொண்டு இருந்ததால், அமித்ஷா அவதூறு ஷாவாகத்தான் இருப்பார். நல்லவர்களுக்கு அன்பான ஷாவாக இருப்பார். மத்திய அரசு மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் எழவில்லை.
இதுபோல திமுக இருக்கிறதா? தமிழகத்தில் அதிக ஊழல் செய்த கட்சியாக திமுகஉள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேரும்போதுதான் விஜய் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார். இல்லாவிட்டால் தேஜகூட்டணியில் உள்ள கட்சி களுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்ற பொறுப்பு இருக்கிறது, விஜய்க்கும் அதே பொறுப்பு இருக்கிறது.
அதை தனியாக சாதிக்க முடியுமா, அணியாக சாதிக்க முடியுமா என்பதை விஜய் யோசிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் எதிரியைத்தான் எதிர்க்க வேண்டும். கொள்கை எதிரியை அல்ல.இவ்வாறு அவர் பேசினார்.