நயினார் நாகேந்திரன் யாத்திரை நிறைவில் பிரதமர் பங்கேற்பு

நயினார் நாகேந்திரன் யாத்திரை நிறைவில் பிரதமர் பங்கேற்பு
Updated on
1 min read

சென்னை: சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’, என்ற முழக்​கத்​துடன் தமிழகம் முழு வதும்சுற்​றுப்​பயணம் மேற் கொண்டு வரு​கிறார். அந்​தவகை​யில், அக்​.12-ல் மதுரை​யில் தனது யாத்திரை தொடங்​கி​னார்.

தொடர்ந்​து, பல்​வேறு மாவட்​டங்​களுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு வரும் அவர், ஜனவரி இறு​தி​யில் நிறைவு செய்​கிறார். அதன் நிறைவு விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்க இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. யாத்​திரை தொடக்​க​ விழா​வில் தேசிய தலை​வர்​கள் யாரும் பங்​கேற்காத நிலையில்மோடியை பங்​கேற்க வைக்​க பாஜக திட்​ட​மிட்​டுள்​ளது.

நயினார் நாகேந்திரன் யாத்திரை நிறைவில் பிரதமர் பங்கேற்பு
நீதிபதி நிஷாபானு கேரள உயர் நீதிமன்றத்தில் டிச.20-க்குள் பணியில் சேர குடியரசுத் தலைவர் கெடு விதிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in