சூடுபிடிக்கிறது புதுச்சேரி தேர்தல் களம் - ‘ரோடு ஷோ’வில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை வருகை

சூடுபிடிக்கிறது புதுச்சேரி தேர்தல் களம் - ‘ரோடு ஷோ’வில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை வருகை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 9-ம் தேதி நடக்​கிறது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, எதிர்க்​கட்​சி​யான இண்​டியா கூட்​ட​ணி, தவெக மற்​றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்​தில் உள்​ளன.

கூட்​டணி ஒப்​பந்​தத்தை மீறி இண்​டியா கூட்​ட​ணி​யில் திமுகவை எதிர்த்து காங்​கிரஸ் போட்டி வேட்​பாளர்​கள் 5 இடங்​களில் போட்​டி​யிடு​கின்​றனர். ஒரு தொகுதியில் விசிகவை எதிர்த்து காங்​கிரஸ் வேட்​பாளர் போட்​டி​யிடு​கிறார்.

இதனால் பல இடங்​களில் 4 முனைப் போட்​டி, சில இடங்​களில் 5 முனைப் போட்டி நில​வு​கிறது. தனி​யாகக் கட்சி தொடங்​கிய சிலர், சுயேச்​சை​யாக களம் காணும் முக்​கியஸ்​தர்​கள் என வெகு சில இடங்​களில் பன்​முனைப் போட்​டி​யும் காணப்​படு​கிறது. வேட்​பாளர்​கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வரு​கின்​றனர்.

இந்​தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்​டணி வேட்​பாளர்​களைஆதரித்து பிரச்​சா​ரம் மேற்​கொள்ள பிரதமர் மோடி நாளை(ஏப்​.3) புதுச்​சேரி வரு​கிறார். மாலை 4.15 மணிக்கு புதுச்​சேரிவிமான நிலை​யம் வரும் பிரதமர்,அங்​கிருந்து அஜந்தா சிக்​னல் சந்​திப்பு வந்​து, அங்​கிருந்து தொடங்​கும் ‘ரோடு ஷோ’​வில் பங்​கேற்​கிறார். அண்ணா சாலை வழி​யாக அண்ணா திடல் வரை 1.7 கி.மீ. தொலை​வுக்கு இந்த ‘ரோடு ஷோ’ சுமார் 1 மணி நேரம் நடக்​கிறது.

இதனால், சாலை​யோரம் இரும்பு தடுப்பு வைக்​கப்​பட்​டு, கூடு​தல் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. பிரதமர் வரும் லாஸ்​பேட் விமான நிலை​யம் தொடங்கி ரோடு ஷோ நடக்​கும் பகுதி வரை தீவிர கண்​காணிப்​பில் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. பிரதமர் ‘ரோடு ஷோ’ செல்​லும் வழி​யில் துணை ராணுவப் படை​யினர் நேற்று பாது​காப்பு அணிவகுப்பை நடத்​தினர்.

உதயநிதி பிரச்​சா​ரம்: 3-ம் தேதி காலை​யில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் புதுச்​சேரி​யில் 'ரோடு ஷோ' நடத்​துகிறார். மரப்​பாலம், வில்​லியனூர் உள்​ளிட்​ட 3 இடங்​களில்​ அவர்​ பேசுகிறார்​.

சூடுபிடிக்கிறது புதுச்சேரி தேர்தல் களம் - ‘ரோடு ஷோ’வில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை வருகை
பேரவைத் தேர்தல் 2026: அசாமில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in