திமுக ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் முடிவு: மதுரையில் பிரதமர் மோடி உறுதி

மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on
2 min read

மதுரை: தமிழகத்​தில் அரசு வேலை​வாய்ப்​பு, பணி​யிட மாற்​றம், டெண்​டர் ஒப்​பந்​தங்​கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்​துள்​ளது. இதனால், தமிழகத்​தில் இருந்து திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்​பதை மக்​கள் தீர்​மானித்​து​விட்​டார்​கள் என்று மதுரை​யில் நடந்த தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

தேசிய ஜனநாயகக் கூட்​டணியின் 2-வது தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக் கூட்​டம் மதுரை மண்டேலா நகரில் நேற்று நடை​பெற்​றது.இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இது பாண்​டிய நாடு. வீரம் விளைந்த பூமி. இந்த மகத்​தான பூமி​யில் இருந்து பசும்​பொன் முத்​து​ராமலிங்​கத் தேவர், மாவீரன் அழகு ​முத்​துகோன், வீர​பாண்​டிய கட்​ட பொம்​மன், மருது சகோ​தரர்கள், இமானுவேல் சேகர​னாரின் பங்​களிப்பை நினை​வு​கூர்கிறேன்.

இங்கு வரு​வதற்கு முன்பு திருப்​பரங்​குன்​றம் சென்று முரு​கனை தரிசனம் செய்​தேன். தமிழக நலனுக்​காக​வும், நாட்டு நலனுக்​காக​வும் வேண்​டினேன். அதே நேரம், பூர்​ணசந்​திரன் என்ற இளம் பக்​தர் உயிர்த் தியாகம் செய்​ததை நினைத்து எனது இதயம் வருந்​தி​யது.

அவரது ஆன்மா சாந்​தி​யடைய முரு​க​னிடம் உருக்​க​மாக பிரார்த்​தித்​தேன். அவரது மனை​வி, 2 மகன்​களை சந்​தித்து ஆறு​தல் கூறினேன். திமுக அரசின் நியாயமற்ற செயல்​பாட்​டால்​தான் இந்த சம்​பவம் நடந்​துள்​ளது. இது வலியை ஏற்​படுத்​துகிறது. இறு​தி​யில் வாய்மை வெல்​லும். முருக பக்​தர்​கள் வெல்​வார்​கள்.

தமிழகத்​தில் இருந்து திமுக ஆட்​சியை அகற்ற வேண்​டும் என்று மக்​கள் தீர்​மானித்​து​விட்​டனர். தமிழக மக்​கள் 25 ஆண்​டு​களுக்​குப் பிறகு, கடந்த 2021-ல் திமுக​வுக்​குப் பெரும்​பான்மை பலத்​தைக் கொடுத்​தனர். ஆனாலும், அவர்​கள் நல்​லாட்​சியை தரவில்​லை. மாநிலத்தை சூறை​யாடினர்.

பரம்​பரை ஆட்​சியை முன்​னெடுக்​கின்​றனர். மதுரை மாநகரம் எம்​ஜிஆருக்கு உறு​துணை​யாக நின்​றது. இதனால், மதுரை என்​றாலே திமுக​வுக்கு வேப்​பங்​கா​யாக கசக்​கிறது. ஊழல் காரண​மாக மதுரை மேயர் ராஜி​னாமா செய்​தார்.

திமுக​வினர் அவர்​களும் பணி​யாற்ற மாட்​டார்​கள். மற்​றவர்​களை​யும் பணி​யாற்ற விட​மாட்​டார்​கள். ‘பணம் நமக்​கு, பிரச்​சினை​கள் மக்​களுக்​கு’ என்​பதே திமுக​ மாடல். தமிழகத்​தில் கடந்த 12 ஆண்​டு​களில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்​பில் 74 திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. இதனால் ஆயிரக்​கணக்​கான வேலை​வாய்ப்​பு​கள், புதிய பொருளா​தார வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. உரிமை​களுக்​காக வாய்​கிழிய பேசும் திமுக, மத்​தி​யில் ஆட்​சி​யில் இருந்​த​போது எது​வுமே செய்​ய​வில்​லை.

காங்​கிரஸ் கட்​சியை ஆட்​சி​யில் இருந்து 60 ஆண்​டு​களுக்கு முன்பே நீக்​கிய மாநிலம் தமிழகம். இதனால்​தான் கச்​சத்​தீவை இலங்​கைக்கு தாரை​வார்த்து தமிழக மக்​களை வஞ்​சம் தீர்த்​தது காங்​கிரஸ் அரசு. அப்​போது திமுக வாய்​மூடி மவுன​மாக இருந்​தது. அவர்​களது கூட்​டணி ஆட்​சி​யில்​தான் ஜல்​லிக்​கட்டை தடை செய்​தனர். பாஜக அரசு​தான் மீண்​டும் கொண்டு வந்​தது.

தமிழகத்​தில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் நாள்​தோறும் அதி​கரிக்​கின்​றன. மது, போதை மாஃபி​யாக்​களால் தங்​களது குடும்​பங்​கள் பாதிக்​கப்​படு​வதை பெண்​கள் வேதனையோடு பார்க்​கின்​றனர். ஜெயலலிதா ஆட்​சி​யில் தங்​கள் வாழ்க்கை எவ்​வளவு நன்​றாக இருந்​தது என்​பதை நினைத்​துப் பார்க்​கின்​றனர்.

தமிழகப் பெண்​களுக்கு உறு​தி​யளிக்​கிறேன். தே.ஜ.கூட்​டணி அரசு அமைந்​ததும் சட்​டம் - ஒழுங்​கில் கவனம் செலுத்​து​வோம். குற்​ற​வாளி​கள், போதை மாஃபி​யாக்​கள் சிறை​யில் தள்​ளப்​படு​வார்​கள். பெண்​களின் பாது​காப்​பு, கண்​ணி​யம் உறுதி செய்​யப்​படும்.

அரசி​யலில் நேர்​மைக்கு எடுத்​துக்​காட்​டாக திகழ்ந்​தவர் காம​ராஜர். அவருக்கு எதிர்​மாறாக இருக்​கிறது திமுக. அரசு வேலை​வாய்ப்​பு, பணி​யிட மாற்​றம், ஒப்​பந்​தங்​கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்​துள்​ளது. பொது​வாக, மக்​கள் பணி​யைச் செய்​வ​தில்​தான் அமைச்​சர்​களிடம் ஆரோக்​கிய​மான போட்டி இருக்​கும். ஆனால், மோசடி செய்​வ​தில் ​தான் திமுக அமைச்​சர்​களிடம் போட்டா போட்டி உள்​ளது.

மனசாட்​சி இன்​றி, ஏழைகள், இளைஞர்​கள், விவ​சா​யிகளிடம் இருந்து திருடு​கின்​றனர். இப்​படிப்​பட்ட ஊழல் அரசு மேலும் தொடர தார்​மீக உரிமை இல்​லை. இதனால், தமிழக மக்​கள் தே.ஜ.கூட்​டணி அரசை கொண்​டுவர தீர்​மானித்​து​விட்​டனர். எங்​கள் கூட்​டணி தூய்​மை​யான, திறமை​யான ஆட்​சியை வழங்​கும்.

சமீபத்​தில் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துடன் இந்​தியா வரலாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒப்​பந்​தத்தை செய்​துள்​ளது. இதன்​மூலம் 28 முன்​னேறிய நாடு​களு​டன் இணைந்​துள்​ளோம். இதனால் இளைஞர்​கள், பணி​யாளர்​கள், விவ​சா​யிகள், தொழில் முனை​வோருக்கு நல்ல வாய்ப்​பு​கள் கிடைக்​கும்.

இளைஞர்​களுக்கு பல லட்​சம் வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கும். உலக அளவில் போட்​டி​யிட்டு வெற்​றி​பெறும் சந்​தர்ப்​பம் கிடைக்​கும். இவை அனைத்​தும் கிடைக்க வேண்​டும் என்​றால், உங்​கள் நலனில் அக்​கறை கொண்ட ஓர் அரசு இருக்க வேண்​டும்.

தே.ஜ.கூட்​டணி அரசால் மட்​டுமே மக்​களை மைய​மாகக் கொண்ட, நிலை​யான ஆட்​சியை வழங்க முடி​யும். தமிழகத்​தின், இந்​தி​யா​வின் வளர்ச்​சியை நாங்​கள் உறுதி செய்​வோம்.இவ்​வாறு பிரதமர் பேசி​னார்.

இந்த கூட்​டத்​தில் மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், ஐஜேக நிறு​வனத் தலை​வர் பாரிவேந்​தர், தமமுக தலை​வர் ஜான்​பாண்​டியன், புரட்சி பாரதம் தலை​வர் ஜெகன்​மூர்த்​தி, பார்​வர்டு பிளாக் கதிர​வன், திரு​மாறன்​, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்​.ஆர்​.தன​பாலன்​, முன்​னாள்​ அமைச்​சர்​கள்​ செல்​லூர்​ ராஜு, ஆர்​.பி.உதயகு​மார்​, அமைப்​புச்​ செய​லா​ளர்​ ராஜன்​செல்​லப்​பா பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி</p></div>
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in