“மக்கள் மீது சுமையை ஏற்றிய ‘பணவீக்க மனிதர்’ மோடி” - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்

Updated on: 
1 min read

சென்னை: ‘நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டு, மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை ஏற்றிய இந்த ‘பணவீக்க மனிதர்’ மோடியின் அரசுக்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மோடி தலைமையிலான பாஜக அரசின் மிக மோசமான பொருளாதார நிர்வாகத்தால் ஒட்டுமொத்த நாடும் ‘மொத்த விலை’ (Wholesale) ஆகச் சீரழிந்து வருகிறது.

ஜனவரி மாதத்தில் 1.19% ஆக இருந்த மொத்த விலைப் பணவீக்கம் (Wholesale Inflation), தொடர்ந்து ஏறுமுகமாகவே பயணித்த நிலையில், கடந்த மாதம் 11.39% என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

ஒருபுறம் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, மறுபுறம் நடுத்தர மக்களை நசுக்கும் ஜி.எஸ்.டி வரிச்சுமை, விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை மற்றும் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம் என பல முனைகளிலும் சாமானிய மக்களைப் பாஜக அரசு வதைத்து வருகிறது.

கார்ப்பரேட் நண்பர்களை மட்டுமே வாழவைக்கும் இந்த அரசால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக நசுக்கப்பட்டுவிட்டது. ஜனவரியில் தொடங்கி, கடந்த மாதம் வரை பணவீக்கம் இவ்வளவு கொடூரமாக உயர்ந்திருக்கிறதே, இதே நிலை நீடித்தால் வரும் டிசம்பரில் மக்களின் நிலை என்னவாகும்?

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டு, மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை ஏற்றிய இந்த ‘பணவீக்க மனிதர்’ (Mahangai Man) மோடியின் அரசுக்கு ஒட்டுமொத்த இந்திய மக்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்</p></div>
ஆட்சியை தக்கவைக்க தவெக நாடகம்: எஸ்ஐஆர் விவகாரத்தில் திமுக பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in