தமிழகத்​தில் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவு​கள் வெளியீடு

அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவிப்பு
தமிழகத்​தில் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவு​கள் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு​கள் வெளி​யீடு தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளி​யான நிலையில், நாளை மே 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் பிளஸ் 2 பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடை​பெற்​றது. இத்​தேர்வை மாநிலம் முழு​வதும் சுமார் 8 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழு​தினர். இவர்​களின் விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணி​கள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடை​பெற்​றது.

தொடர்ந்து தேர்வு முடிவு​களை வெளி​யிடு​வதற்​கான பணி​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டு வரு​கிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு​கள் ஏற்​கெ​னவே அறி​வித்​த​படி மே 8-ல் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், தேர்வு முடிவு​கள் வெளி​யீடு சற்று தள்​ளிப்​போக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் வெளியாகின. பிளஸ் 2 விடைத்​தாள் மதிப்​பீடு முடிக்​கப்​பட்​டு, மாணவர்​களின் மதிப்​பெண்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றப்​பட்டுள்ளன. எனினும், தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தால் தேர்வு முடிவு​களை வெளி​யிட அரசின் ஒப்​புதலைப் பெற வேண்​டும். இதனால், திட்​ட​மிட்​டபடி மே 8-ல் பிளஸ் 2 முடிவு​களை வெளி​யிட முடி​யாது என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

இது பல்வேறு மேற்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க ஆர்வமுடன் காத்திருந்த மாணவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நாளை மே 8-ம் தேதி திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

7845252525 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள்: 14417 / 104/ 14416 என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்​தில் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தேர்வு முடிவு​கள் வெளியீடு
“எனது உதவியாளர் கொல்லப்பட இதுவே காரணம்...” - சுவேந்து அதிகாரி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in