

மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் ஆந்திரா, கோவா, மேற்குவங்கம் போல மீன்பிடி தடைக் கால நிவாரணமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு நிவாரண நிதியை உயர்த்துவது அரசின் கொள்கை முடிவு. ரூ.20 ஆயிரமாக உயர்த்துவது குறித்து அடுத்த தடைக் காலத்துக்குள் அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.