இலங்கை செல்லும்போது இயந்திர கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: வியட்​நாமில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்​புக்கு பயணி​கள் விமானம் நேற்று முன்​தினம் இரவு சென்று கொண்​டிருந்​தது.

அந்த விமானத்​தில் 143 பயணி​கள், 9 விமான ஊழியர்​கள் உட்பட 152 பேர் இருந்தனர்.

விமானம் நடு​வானில் சுமார் 36,000 அடி உயரத்​தில் பறந்து கொண்​டிருந்த போது, இயந்​திர கோளாறு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, விமானிகள் டெல்​லி​யில் உள்ள தலைமை கட்​டுப்​பாட்டு அலு​வல​கம் மூல​மாக, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரம் தெரி​வித்​தனர், விமானம் தரை இறங்க கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி​கள் அனு​மதி கொடுத்​தனர், இதையடுத்து விமானம் பாது​காப்​பாக தரை​யிறக்கப்பட்டது.

விமானத்​தில் ஏற்​பட்ட இயந்​திர கோளாறை பொறி​யாளர்​கள் சரி செய்த பிறகு அந்த விமானம் கொழும்பு சென்​றது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தந்தையுடன் பேட்மிண்டன் விளையாடியபோது காவல் உதவி ஆணையரின் மகன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in