மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை

பழனிசாமியுடன் இறு​திக்​கட்​ட தொகு​திப் பங்​கீடு பேச்சு
 பியூஷ் கோயல் | கோப்புப் படம்

பியூஷ் கோயல் | கோப்புப் படம்

Updated on
1 min read

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி அதி​முக - பாஜக தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்தை இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் பேச்சு நடத்த மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வரு​கிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யிலும் தொகு​திப் பங்​கீடு இன்​னும் இறு​தி​யாக​வில்​லை. கடந்த 19-ம் தேதி டெல்லி சென்ற அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மத்​திய அமைச்​சர் அமித் ஷாவுடன் தொகுதிப் பங்​கீடு குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார். அதைத் தொடர்ந்து அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனும் அமித்​ஷாவை சந்​தித்​துப் பேசி​னார். பாமக தலை​வர் அன்​புமணி​யும் டெல்லி சென்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

இந்​நிலை​யில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்​பாள​ரும் மத்​திய அமைச்​சரு​மான பியூஷ் கோயல் இன்று (23-ம் தேதி) சென்னை வரு​கிறார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை சந்​தித்​து, தொகு​திப் பங்​கீடு தொடர்​பான இறு​திக்​கட்​டப் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடுபட உள்​ளார். கூட்​ட​ணித் தலை​வர்​களை​யும் பியூஷ் கோயல் சந்​தித்​துப் பேச உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

சுமார் 170 தொகு​தி​களில் போட்​டி​யிட அதி​முக திட்​ட​மிட்​டுள்​ளது. எஞ்​சிய இடங்​களை மட்​டுமே கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​குப் பகிர்ந்து அளிக்க முடி​யும் என்​ப​தில் கட்​சித் தலைமை மிக​வும் உறு​தி​யாக உள்​ள​தாக கூறப்​படு​கிறது. அதேவேளை​யில், பாஜக தரப்​பில் 30 தொகு​தி​கள் வரை கோரப்​படு​வ​தால், எந்​தெந்​தத் தொகு​தி​களைப் பகிர்ந்து கொள்​வது என்​ப​தில் கடந்த சில நாட்​களாக விவாதங்​கள் நீடித்து வந்​தன.

குறிப்​பாக, சென்னை மாநகரின் ‘நட்​சத்​திர’ தொகு​தி​களான மயி​லாப்​பூர், வேளச்​சேரி மற்​றும் தியாக​ராய நகர் ஆகிய இடங்​களைப் பெறு​வ​தில் பாஜக தீவிர ஆர்​வம் காட்டி வரு​கிறது. இந்​நிலை​யில், பியூஷ் கோயலின் இன்​றைய சென்னை வருகை மிகுந்த முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகக் கருதப்​படு​கிறது. ஏற்​க​னவே அதி​முக​வின் மூத்த தலை​வர்​கள் அடங்​கிய குழு, பாமக மற்​றும் தமாகா உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்​சிகளு​டன் முதற்​கட்​டப் பேச்​சு​வார்த்​தைகளை வெற்​றிகர​மாக நிறைவு செய்​து​விட்​டது.

கூட்​ட​ணித் தலை​வர்​களு​டன் பியூஷ் கோயல் நடத்​தும் பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு, இன்று இரவு அல்​லது நாளை மாலைக்​குள் அதி​காரப்​பூர்வ தொகு​திப் பங்​கீடு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று கூறப்​படு​கிறது. தொகு​திப் பங்​கீடு இறு​தி​யான கையோடு, வேட்​பாளர் பட்​டியல் அறி​விப்பு மற்​றும் அனல் பறக்​கும் தேர்​தல் பிர​சா​ரங்​கள் தொடங்க தேசிய ஜனநாயகக்​ கூட்​ட​ணி திட்​ட​மிட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p> பியூஷ் கோயல் | கோப்புப் படம்</p></div>
பாஜகவில் எனக்கு எந்த பொறுப்பும் வழங்காமல் தேர்தல் களத்தில் எப்படி பணியாற்றுவது? - சரத்குமார் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in