தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தேங்காய் உடைத்த மனுதாரர் ராம.ரவிக்குமார், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று கோயிலில் தேங்காய் உடைத்த மனுதாரர்

Published on

மதுரை: ​திருப்பரங்குன்றம் தீபத்​தூண் தொடர்​பான தீர்ப்பை வரவேற்​று, வழக்கு தொடர்ந்த மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் மற்​றும் வழக்​கறிஞர் அருண் சுவாமி​நாதன் ஆகியோர் 108 தேங்​காய்​களை உடைத்​தனர்.

இவ்​வழக்​கின் மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று நீதி​மன்​றம் அளித்​துள்ள தீர்ப்​பை, முருக நீதி​யாகப் பார்க்​கிறேன். தீர்ப்​பின் நகலை முரு​கன் பாதத்​தில் வைத்​து, எனது கடமையை நிறைவேற்றி விட்​டேன்.

இந்​துக்​களுக்​கும், முஸ்​லிம்​களுக்​கும் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. சகோ​தர​ராக, மத நல்​லிணக்​கத்​துடன் செயல்​படும் மக்​களிடையே தமிழக அரசே பிரச்​சினையை ஏற்​படுத்​து​வ​தாக தீர்ப்​பின் மூலம் நீதி​மன்​றம் அரசுக்கு சவுக்​கடி கொடுத்​துள்​ளது. தமிழக அரசைக் கண்​டித்து உயிர்​நீத்த தீபப் போராளி பூர்​ணசந்​திரனுக்கு இந்த தீர்ப்பை சமர்ப்​பிக்​கிறோம்.

முரு​கன் கோயில் காணிக்கை பணத்​தில் சம்​பளம் பெற்​று​விட்​டு, அறநிலை​யத் துறை​யினர் முரு​க​னுக்கு எதி​ராக செயல்​பட்​டனர். இவ்​வாறு அவர் கூறி​னார். மனு​தா​ரரின் வழக்​கறிஞர் அருண் சுவாமி​நாதன் கூறும்​போது, “நீ​தி​மன்​றத்​தில் தமிழக அரசு முன்​வைத்த பொய்​களுக்கு முரு​கன் பதில் கொடுத்​துள்​ளார். சட்​டம் ஒரு​புறம் இருந்​தா​லும், தர்​மம்​தான் என்​றும் நிலைக்​கும் என்​ப​தற்​கேற்ப தீர்ப்பு வந்​துள்​ளது.

தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கிய திருப்பரங்குன்றம் கோட்டைத் தெரு பகுதி பெண்கள்.

தீர்ப்பை வரவேற்று இனிப்புகள் வழங்கிய திருப்பரங்குன்றம் கோட்டைத் தெரு பகுதி பெண்கள்.

தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை செயல்​படுத்​த​ாததற்கு காரணம் அரசி​யல்​தான் என்று நீதி​மன்​றம் தெளி​வாகக் கூறி​யுள்​ளது. தயவுசெய்து இதில் அரசி​யல் செய்​யாதீர்​கள். அன்றே தீபம் ஏற்​றி​யிருந்​தால், அரை மணி நேரத்​தில் நிகழ்வு முடிந்​திருக்​கும்” என்​றார்.

பெண்​கள் கொண்​டாட்​டம்: தீபத்​தூண் தொடர்​பான தீர்ப்பை வரவேற்று திருப்​பரங்​குன்​றம் கிராம மக்​கள் இனிப்​பு​களை வழங்​கினர். மலை உச்​சிக்​குச் செல்​லும் வழி​யில், பழனி​யாண்​ட​வர் கோயில் அடி​வாரத்​தில் உள்ள கோட்​டைத்​தெரு பகுதி பெண்​கள், பொது​மக்​களுக்​கும், பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்ள போலீ​ஸாருக்​கும் இனிப்பு வழங்​கினர்.

மலை உச்​சி​யில் தீபம் ஏற்ற வேண்​டும் என்ற எங்​களது வேண்​டு​தல், உயர் நீதி​மன்​றம் மூலம் நிறைவேறி​யுள்​ள​தாக அவர்​கள் மகிழ்ச்சி தெரி​வித்​தனர். மேலும், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதி​மன்ற உத்​தரவை வரவேற்​று, அப்​பகுதி பாஜக​வினர் பட்​டாசுகள் வெடித்​துக் கொண்​டாடினர்.

தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பை வரவேற்று, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தேங்காய் உடைத்த மனுதாரர் ராம.ரவிக்குமார், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 ஜனவரி 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in