மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தினருடன்மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடுவார்.

ரிஷபம்: குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பால்ய நணபர்களைச் சந்திப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

மிதுனம்: பிரபலங்களின் உதவி கிடைக்கும். அழகு சாதனப் பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.

கடகம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

சிம்மம்: அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை கேட்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப விவகாரங்களை வெளிநபரிடம் பகிராதீர்கள். எதிலும் நிதானம் அவசியம்.

கன்னி: நெடுநாட்களாகத் தடைபட்டு வந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் நெருங்கி வருவார்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.

துலாம்: அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கும் எண்ணம் வரும். எதிர்காலத்துக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். குடும்பத்துடன் புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் நன்மை தரும்.

தனுசு: அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

மகரம்: முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பலமுறை யோசிப்பது நல்லது. மூத்தோரின் ஆலோசனைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்கும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம்.

கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திருமணப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் வேகமெடுக்கும். அரசு விவகாரங்களில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

மீனம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கடன் பிரச்சினைகளுக்குத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வெளியூர் பயணம் உண்டு.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 ஜனவரி 2026
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசியினருக்கான ஜனவரி மாத பலன்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in